2021 ஆம் வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கும் தமிழ் திரைப்படங்களில் ஒன்று மாநாடு.
இந்த Maanaadu 'மாநாடு' படத்தை இயக்குனர் வெங்கட்பிரபு (Venkat Prabhu) இயக்கி முடித்துள்ளார். இந்த படத்தை V ஹவுஸ் சார்பாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்க வில்லனாக முக்கிய வேடத்தில் நடிகர் எஸ்ஜே.சூர்யா நடித்துள்ளார். இவர்களுடன் பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், மஹாத் ராகவேந்திரா, படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர், யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்தப்படத்தின் ஒளிப்பதிவை ரிச்சர்டு எம்.நாதன் கவனிக்க, பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர், முன்னோட்டம், முதல் சிங்கிள் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பின் தயாரிப்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. வரும் நவ-25ஆம் தேதி இந்தப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் திரையரங்குகளுக்குள் ரசிகர்கள் வந்து படம் பார்க்க கொரோணா தடுப்பூசி சான்றிதழ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு ‘மாநாடு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் "மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு, வணக்கம்.
திரைத்துறை வெகுநாட்களாக நலிந்துவிட்டது. படங்களை வீட்டிலிருந்தே பார்க்கும் முறை பிறந்ததிலிருந்து திரையரங்கங்கள் வெறிச்சோடத் துவங்கிவிட்டன. அதிலிருந்து மீண்டுவர பெரிய படங்களே உதவுகின்றன. அண்ணாத்தே மக்களை திரையரங்கிற்கு வரவைத்தது. அம்பது விழுக்காடு இருக்கை ஆக்ரமிப்பு என்ற நிலையை மாற்றி நூறு சதவீத இருக்கை ஆக்ரமிப்பை தந்தது இரைத் நுறையினருக்கு நெஞ்சில் பால் வார்த்தது. அனைவரும் தங்களின் அனுமதியை தொழில் செய்யும் வெகுமதியாகப் பார்த்தோம் நன்றியோடு! ஆனால், இப்போது வேக்ஷினேஸன் செலுத்தினால் மட்டுமே திரையரங்க அனுமதி என்பது அத்தனை திரைத்துறையினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுக்க தடுப்பூசி இன்னும் கட்டாயமாக்கப்படவில்லை. பதினெட்டு வயதிற்கு கீழே உள்ளவர்களுக்கு இன்னும் தடுப்பூசியே கண்டுபிடிக்கவில்லை. அவர்கள் பள்ளிகளிலும் பொது இடங்களிலும் சென்று வர அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். உங்கள் ஆட்சியில் வேக்சினேசன் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது. நோய்த் தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது. முகக் கவசம், சானிடைசர் போன்றவற்றால் தங்களை பாதுகாத்தே வருகின்றனர் மக்கள். தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே திரையரங்கங்களில் அனுமதிக்க வேண்டும் என்ற உத்திரவு இரைத்துறையை வெகுவாகப் பாதிக்கும்.
ஆன்டிராய்டு போன் இல்லாதவர்கள் கூட படத்திற்கு வருவார்கள். அவர்களை சர்டிபிகேட் எடுத்துவரச் சொன்னால் திரையரங்கமி வருவதை அவர்கள் தவிர்ப்பார்கள், அதுவும் திரையரங்கம் வந்து திருப்பி அனுப்பினால் அவர்கள் மீண்டும் திரையரங்குகளின் பக்கமே வரமாட்டார்கள். தயைகூர்ந்து 18 வயதிற்கு கீழே உள்ளவர்கள் அனுமதிக்கப்படுவது போல விரைவில் தடுப்பூசி போட இருப்பவர்களையும் அனுமதித்து திரைத்துறையை வாழ வைக்க வேண்டுகிறோம். விரைந்து முடிவெடுத்து நம் இரையுலகையும்... திரையரங்க அதிபர்களையும் காக்க வேண்டுகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.