தனுஷின் 19 வருஷத்தில் ரெக்கார்டு பிரேக்கிங் Opening.. கர்ணன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் தெரியுமா?
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், நட்டி, லால், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பில் கர்ணன் திரைப்படம் உருவாகியுள்ளது. அசுரன் திரைப்படத்தை தயாரித்த கலைப்புலி எஸ் தாணு இந்த படத்தை தமது வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தயாரித்துள்ளார். கதிர் நடிப்பில் உருவான பரியேறும் பெருமாள் திரைப்படத்துக்கு மாரி செல்வராஜின் இரண்டாவது படமாக உருவாகியுள்ளது கர்ணன்.
இதேபோல் வெற்றிமாறன் இயக்கத்தின் உருவான அசுரன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ் கர்ணன் திரைப்படத்திலும் தமது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாகவும் கர்ணன் படமும் நல்ல விமர்சனங்களை பெற்றுவருவதாகவும் தெரிகிறது. சந்தோஷ் நாராயணன் இசையில் இந்த படத்தின் பாடல்கள் வெளியானது முதலே படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்த நிலையில் இப்படத்தின் கலெக்ஷன்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதுமான கர்ணனின் முதல் நாள் (ஒரு நாள்) பாக்ஸ் ஆபீஸ் கிராஸ் கலெக்ஷன் பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன.
அதில், சிட்டியில் (CITY) 82 லட்சமும், செங்கல்பட்டில் 3.90 கோடியும், கோவையில் (CBE) 1.55 கோடியும், நார்த் ஆற்காடு மற்றும் சவுத் ஆற்காடு (SOUTH 75 லட்சம், NORTH 65 லட்சம் என மொத்தம்) 1.40 கோடியும், சேலத்தில் 69 லட்சமும், மதுரையில்(MR)1.29 கோடியும், திருச்சி, தஞ்சாவூரில் (TT) 84 லட்சமும், திருநெல்வேலி, கன்னியாகுமரியில் (TK) 58 லட்சமும் என மொத்தம் 11.07 கோடி கலெக்ஷன் ஆகியுள்ளது. இது அசுரனை விடவும் அதிக கலெக்ஷன் என்பதும், இதுவரை தனுஷின் 19 வருட நடிப்பு கரியரில் இதுதான் ரெக்கார்டு பிரேக்கிங் ஓபனிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: தனுஷின் 'கர்ணன்' படத்த பத்தி விஜய் சேதுபதி சொன்னது என்ன தெரியுமா? வைரல் ட்வீட்!