நடிகை சித்ராவின் மரணத்துக்கு காரணம் இதுதான்... உடற்கூறு ஆய்வில் போலீசார் புதிய அறிக்கை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர் தொடர் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சித்ரா. இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும், சீரியல்களிலும் நடித்து இருந்தார், இருந்தாலும் இந்த தொடர் மூலம் வேற லெவல் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். இந்நிலையில் அவர் மரணமடைந்த செய்தி ரசிகர்களை மிகவும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவருடைய பாசிட்டிவ் குணம் தான் ரசிகர்களின் பேவரைட்டாக இருந்தது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்நிலையில் நடிகை சித்ராவின் உடற்கூறு ஆய்வு முடிந்துள்ளது. மருத்துவர்கள் அவரது உடலை பரிசோதித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

பலரும் சித்ரா தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், சித்ராவின் மரணத்திற்கு பின்னால் மர்மமான காரணம் இருப்பதாகவும், இது கொலையா தற்கொலையா போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர். ஏன் சித்ராவின் பெற்றோரே 'சித்ரா தற்கொலை செய்திருக்க மாட்டார், அவரை அடித்து கொன்று விட்டனர்" என்பது போல் குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். தற்போது சித்ராவின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வெளியாகி உள்ளது. அதில் முதல்கட்டமாக 'சித்ராவின் மரணத்துக்கு தற்கொலைதான் காரணம்' என்று போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Reason for actress chitra death according to police report சித்ராவின் மரணத்துக்கு காரணம்

People looking for online information on Chithra, Pandiyan Stores will find this news story useful.