விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆயுத எழுத்து சீரியல் தற்போது திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய தொடர்கள் ஆன ராஜா ராணி 2, மௌனராகம் 2 போன்ற சீரியல்கள் வரிசையில் இருக்கும் நிலையில், மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் தொடங்க உள்ளது. இதனையடுத்து ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டுள்ள காரணத்தை அறியாமல் ரசிகர்கள் குழம்பி வந்தனர்.

இந்நிலையில் சீரியலில் நடித்த ஹீரோயின் நடிகை சரண்யா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில் "பலரும் சீறிஅய்ல திடீரென நிறுத்தப்பட்டது ஏன் என்பது குறித்து என்னிடம் கேள்வி கேட்கின்றனர். ஆயுத எழுத்து சீரியல் நிறுத்தப்பட்டது உண்மைதான். ஆனால் அதற்கான காரணம் என்னவென்று எனக்கே தெரியாது. சரியான காரணம் தெரிய வரும்போது அதை நிச்சயம் ரசிகர்களுக்கு அறிவிப்பேன். மேலும் ஒரு நல்ல தொடரில் மீண்டும் உங்களை சந்திப்பேன்" என்று விளக்கம் கொடுத்துள்ளார்.