பிக்பாஸ் வீட்டுக்குள் நிரூப் மற்றும் பிரியங்கா இருவரும் சண்டையிட்டுக் கொள்வது என்பது அண்மைக் காலமாகவே நடந்து வரும் ஒரு சங்கதியாக இருந்துவருகிறது.

என்னதான் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் இவர்களது சண்டையை பார்த்து சிலருக்கு சங்கடம் இருந்தாலும் பலரும் இருவரின் தரப்பு அணிகளாக பிரிந்து இருக்கின்றனர். இதில் பாவனி, அபிஷேக் உள்ளிட்டோர் பிரியங்கா தரப்பில் இருக்கின்றனர். தாமரை, அக்ஷரா உள்ளிட்டோர் நிரூப் தரப்பில் இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் பாத்திரம் கழுவும் போது, எல்லா வேலைகளையும் தாமரை செய்வதாக பிரியங்கா குற்றம்சாட்டி வந்தார். இதனைத் தொடர்ந்து கேப்டனாக நிரூப் தன்னுடைய கடமையை செய்யவில்லை, தாமரையை பாத்திரம் கழுவ விடுகிறார் என்று பிரியங்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வர, “தாமரைக்கு இது ஒன்றும் கடினமல்ல .. அவள் கஷ்டமாக இருந்தால் அவளே பேசிவிடுவாள். வாய் விட்டுச் சொல்லி விடுவாள்” என்று நிரூப் சொல்கிறார்.
ஆனாலும் பிரியங்கா கேட்காமல் தாமரை வேலை செய்வதை பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது என்று சொல்ல, ஒரு கணம் தாமரையை அழைத்து பிரியங்கா முன்னிலையில் நிரூப் விசாரிக்கிறார். அப்போது தாமரை, “எனக்கு கஷ்டமாக இருந்தால் நானே சொல்லி விடுவேன்.. விட்டுவிடுங்கள்.. இதை” என்று சொல்லிவிட்டுப் போகிறார்.
ஆனால் உண்மையில் பாத்திரம் கழுவ வேண்டியது ராஜூ என்பது தெரிய வந்த பிறகுதான் பிரியங்கா, அபிஷேக், பாவனி உள்ளிட்டோர் தனக்கு பரிந்து பேசுவது போல் பேசுவதாக தாமரை நிரூப்பிடம் தனியாக சென்று நேரடியாகவே கூறிவிட்டார். இதனையடுத்து நேரடியாக பிரியங்காவிடம் சென்று நிரூப் சண்டை போடுகிறார்.
அப்போதுதான் டிவி டிபேட் டாஸ்கில் தன்னையும் இமானையும் வைத்து கேள்விகள் கேட்டு கலாய்த்ததில் தனக்கு உடன்பாடு இல்லை என்று நிரூப் சொல்ல, அதற்கு பிரியங்கா, “உன் ஒத்துழைப்புடன் தானே நாம் இதைச் செய்தோம்?” என நிரூப்பிடம் பதில் சொன்னதுடன் பிக்பாஸிடம் குறும்படம் கேட்டுள்ளார்.