'மெட்டி ஒலி' விஜியின் மரணத்துக்கு காரணம் 'இதுதான்'!!!... நண்பர்கள் கண்ணீர் பேட்டி VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மெட்டி ஒலி' சீரியலில் விஜி கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஷ்வரி சென்னையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 40.

அவருடன் நடித்த சக நடிகர்கள், குறிப்பாக மெட்டி ஒலி சீரியலில் நடித்த நடிகர்கள் சேத்தன் மற்றும் காயத்ரி சாஸ்திரி (சரோ), வனஜா (லீலா) உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இவர்களைத் தவிர நடிகர்கள் லதா, ஜீவா, ரேவதி, ரிஷி பலரும் அஞ்சலி செலுத்தியதுடன் உருக்கமாகவும் மனமுடைந்தும் உமாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட வீடியோக்கள் வெளியாகியிருந்தன.

உமாவைப் பற்றி சொல்லும் அவருடைய நண்பர்கள் பலரும் உமா மிகவும் நல்ல கேரக்டர். எல்லாரிடமும் அன்பாக பாசமாக பேசக்கூடியவர். உதவி செய்யக்கூடிய மனப்பான்மை உடையவர். எப்போதும் பாசிடிவான ஒருவர் என்று குறிப்பிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை உமா மகேஷ்வரி குறித்து பேசிய சீரியல் நடிகை லதா, உமா மகேஷ்வரி தன்னை பல முறை அக்கறையுடன் விசாரிப்பார் என்றும் தன்னைக்கு அவ்வப்போது வீட்டுக்கு உமா அழைத்ததாகவும் ஆனால் முதல் முறை வரும்போது இப்படி ஒரு நிலையில் வந்தது வேதனை அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் லதாவின் கணவர் ராஜ்கமல் பேசும்போது உமா மகேஷ்வரி மஞ்சள் காமாலையால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டு உருக்கமாக பேசியிருந்தார். இவர்கள் பேசும் முழு வீடியோவை இணைப்பில் காணலாம்.

'மெட்டி ஒலி' விஜியின் மரணத்துக்கு காரணம் 'இதுதான்'!!!... நண்பர்கள் கண்ணீர் பேட்டி VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Reason behind metti oli viji uma maheswari death video

People looking for online information on Latha, Rajkamal, Uma maheswari, Viji will find this news story useful.