90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கக்கூடிய புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.
தமிழ் சினிமாவில் 90களில் அறிமுகமாகி பல்வேறு ரசிகர்களை பெற்ற நடிகர் அப்பாஸ் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் அந்தஸ்துடன் இருந்து வந்த பல நடிகர்களில் ஒருவர். அந்த சமயத்தில் பெண்கள் மத்தியில் கனவு கண்ணனாக நடிகர் அப்பாஸ் வலம் வந்தவர். இன்றும் அவருக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழில் பிரபலமான அப்பாஸ், தொடக்க கால படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததை அடுத்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
கடந்த 2001 ஆம் ஆண்டு எராம் அலி என்கிற பேஷன் டிசைனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் அப்பாஸ். எராம் அலி - அப்பாஸ் தம்பதியருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். திருமணத்திற்கு பிறகு அப்பாஸ் சினிமா, டிவி சீரியல்களிலும், விளம்பர படங்களிலும் நடித்து வந்தார். 2011 ஆம் ஆண்டு கோ திரைப்படத்தில் ஒரு பாடலில் தோன்றிய நடிகர் அப்பாஸ் அதன்பிறகு எந்த திரைப்படத்திலும் பெரிதாக தோன்றவில்லை.
குடும்பத்துடன் வெளிநாட்டில் செட்டிலானதாக சொல்லப்படும் நடிகர் அப்பாஸ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகதான் இருந்துவருகிறார். ஆம், தாம் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் அவ்வப்போது பகிர்ந்து வரும் அப்பாஸ் தற்போது மருத்துவமனையில் இருந்து சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னாச்சு இன்று பதறி இருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அப்பாஸ்க்கு கால் முட்டியில் ஒரு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும், அக்டோபர் மாதம் தன்னுடைய முட்யியில் ஏற்பட்ட காயத்திற்காக பிசியோதெரபி சிகிச்சை மேற்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும் தன்னுடைய வலது காலில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிற அப்பாஸ் நல்லபடியாக அறுவை சிகிச்சை முடிந்து விட்டதாகவும், அப்போது எடுத்த புகைப்படத்தையே இப்போது பகிர்ந்து இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் விரைவில் அனைத்தும் பூரண நலம் பெற வாழ்த்துக்கள் என்று ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
Also Read | கோவிலில் திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை.. ட்ரெண்ட் ஆகும் திருமண ஃபோட்டோஸ்.