'RC15'.. பழமையான பள்ளிவாசலில் ஷூட்டிங்.. ஷங்கர் வெளியிட்ட வைரல் BTS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

RC15 படத்தை  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற்றது.   மிகப்பெரிய பொருட்செலவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் நியுசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நியுசிலாந்து படப்பிடிப்பு நிறைவடைந்தது என நடிகர் ராம் சரண், சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த பாடலுக்கு பாஸ்கோ மார்ட்டிஸ் நடனம் அமைத்துள்ளார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் வட அமெரிக்கா (அமெரிக்கா & கனடா) நாடுகளின் திரையரங்க ரிலீஸ் உரிமத்தை பிரபல முன்னணி நிறுவனம் Shloka Entertainments கைப்பற்றி உள்ளது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத் நகரில் உள்ள சார்மினார் பள்ளிவாசல் பகுதியில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை இயக்குனர் ஷங்கர் தனது டிவிட்டர் பக்கத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

RC 15 Next Schedule Shooting Update From Director Shankar

People looking for online information on Ram Charan, RC15, Shankar will find this news story useful.