லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பில் திரைப்படங்களை தயாரித்து வந்தவர் ரவீந்தர் சந்திரசேகரன்.
குறிப்பாக Behindwoods-ல் பிக்பாஸ் குறித்த தமது பார்வையை முன்வைக்கும் நிகழ்ச்சியை வழங்கிவந்த ரவீந்தர், FATMAN என்கிற அடையாளத்தால் இணையவழி நிகழ்ச்சிகளில் அறியப்படுவர். கடைசியாக ரவீந்தர் தயாரிப்பில் சாந்தனு பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்நிலையில்தான் அண்மையில் ரவீந்தர், மகாலட்சுமியை திருமணம் செய்துகொண்டார்.
இதனை தொடர்ந்து அந்த சமயத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் தம்முடைய வலைப்பக்கத்தில், “மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க., ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!'” என பதிவிட்டு விஜே மகாலட்சுமிக்கு தாலி கட்டும் திருமண புகைப்படங்களை பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.
முன்னதாக பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேக பேட்டியளித்திருந்த மகாலட்சுமி, “எனக்கு அவர் இப்படி இருப்பது பிரச்சனையாக தோன்றவில்லை. எனக்கே ஏதும் தோன்றாத போது, நீங்கள் ஏன் அதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றுதான் நான் அவரிடம் கேட்பேன். அவர் எப்படி இருக்கிறாரோ அப்படியே எனக்கு பிடிக்கும். அவ்வளவு தான். உடம்பை குறைப்பதற்கான முயற்சிகள் பற்றி என்னிடம் சொல்வார். நான் அப்படி எதையும் செய்து விட வேண்டாம் என்று தான் கூறுவேன். உடல் ஆரோக்கியத்தை மட்டும் பார்த்துக் கொண்டால் போதும்” என்று கூறி இருந்தார்.
தற்போது கூட, தன் மனைவி மகாலட்சுமியுடன் மங்களகரமான கோலத்தில் நிற்கும் புதிய புகைப்படத்தை பகிர்ந்த ரவீந்தர் சந்திரசேகர், மஞ்சள் கயிறு (திருமணத்தில் கட்டியது) தற்போது திருமாங்கல்யமாக மாற்றி கோர்க்கும் சடங்கு தன் மனைவிக்கு நிகழ்ந்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில்தான் தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி இருவரும் தம்பதி சகிதமாக, விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளனர்.
இதில் ரவீந்தர், ஐ லவ் யூ சொல்வதே இல்லை என மகாலட்சுமி செல்லமாக புகார் வைக்க, அனைவர் முன்னிலும் ரவீந்தர், மகாலட்சுமியை பத்திரமாக பார்த்துக் கொள்வதாக கூறி ப்ரொபோஸ் செய்தார். இதேபோல் மகாலட்சுமிக்காக கவிதைகளை கட்டவிழ்த்த ரவீந்தர், ஜாலியாக சுவாரஸ்யமாக நிறைய பேசியிருக்கிறார்.
இணையத்தை கலக்கும் ட்ரெண்டிங் கப்பிள்ஸ் என்று கூறி, ப்ரோமோ வெளியான இந்த நிகழ்ச்சி, வந்தாள் மஹாலஷ்மியே என்கிற பெயரில், அக்டோபர் 2-ஆம் தேதி ஞாயிறு மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது.