ரவி தேஜாவுடன் கைகோர்த்த விஷ்ணு விஷால்…. TITLE-ஏ செம்ம… வெளியான MOTION POSTER

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிக்கும் கட்டா குஸ்தி படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

Advertising
>
Advertising

3 years of மஜிலி… நாக சைதன்யாவோடு இருக்கும் போஸ்டரைப் பகிர்ந்த சமந்தா!

கிரிக்கெட்டர் to நடிகர்

அடிப்படையில் தொழில்முறை கிரிக்கெட்டரான விஷ்ணு விஷால் இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதையடுத்து அவர் நடிப்பில் வெளியான ஜீவா, நீர்ப்பறவை, மாவீரன் கிட்டு மற்றும் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ஆகிய படங்கள் வெற்றி பெற்று அவரை முன்னணி நடிகராக்கின. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் 'எஃப்ஐஆர்', 'காடன்', உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியான நிலையில் மோகன்தாஸ் படம் விரைவில் ரிலீஸாக உள்ளது.

திருமணமும் விவாகரத்தும்…

விஷ்ணு விஷால் தன்னுடன் கல்லூரியில் படித்த ரஜினி என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ள நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு தனது மனைவியை விவாகரத்து செய்தார். இப்போது பேட்மிண்ட்டன் விளையாட்டு வீராங்கனையான ஜ்வாலா கட்டாவை காதலித்து வருகிறார். தங்கள் காதலை இருவருமே ரசிகர்களுக்கு அறிவித்துள்ளனர். அடிக்கடி காதலியுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

ரவி தேஜாவோடு கூட்டணி…

இந்நிலையில் தற்போது விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. ’கட்டா குஸ்தி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம் குஸ்தியைக் கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை விஷணு விஷாலின் விஷணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து பிரபல தெலுங்கு நடிகரான ரவி தேஜாவின் ’RT டீம்வொர்க்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை செல்ல அய்யாவு இயக்குகிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். பிரசன்னா ஜி கே எடிட்டராக பணியாற்றுகிறார். கலை இயக்கத்தை உமேஷ் மேற்கொள்கிறார். படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளை அன்பறிவ் வடிவமைக்க உள்ளனர்.

தற்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் அனிமேஷன் வடிவில் படத்தின் கதைக்களத்தை வெளிப்படுத்தும் விதமாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் வீரா என்ற கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். வெண்ணிலா கபடிக்குழு, ஜீவா என விளையாட்டு கதைகளை மையப்படுத்தி வெற்றிப் படங்களைக் கொடுத்த விஷ்ணு விஷால் மீண்டும் இந்த படத்தின் மூலம் ஸ்போர்ட்ஸ் ஜானர் படத்துக்கு திரும்பியுள்ளார்.

”என்ன ஆச்சுனு தெரில”… ஐஸ்வர்யா ராஜேஷ் Tweet… மீட்டுக்கொடுத்த இன்ஸ்டாகிராம்!

தொடர்புடைய இணைப்புகள்

Ravi teja Vishnu vishal combination gatta kusthi motion poster

People looking for online information on Gatta Kusthi Motion Poster, Gatta Kusthi Movie, Ravi Teja, Vishnu Vishal will find this news story useful.