KGF 2 : நிஜமாவே சில்லறைய சிதறவிட்ட ரசிகர்கள்.. பிரபல நடிகை பகிர்ந்த வீடியோ..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யாஷ்-ன் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை காணவந்த ரசிகர்கள் தியேட்டரில் காசுகளை அள்ளி எறிந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertising
>
Advertising

கேஜிஎஃப் 2

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13 ஆம் தேதி வெளியான பான் இந்தியா படம் 'கேஜிஎஃப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படத்தின் முதல் பாகத்தை பார்த்துவிட்டு ஆர்வமாக காத்திருந்த ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் கொடுத்துள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். கேஜிஎப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தில் நடைபெறும் அதிகாரப்போட்டிகளையும், அதன் பின் கதையின் நாயகன் யாஷ் நடத்தும் அதிரடிகளையும் மையமாக வைத்து கதை நகர்கிறது.

இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் பல நாடுகளில் கேஜிஎஃப் 2 ஓடிக்கொண்டிருக்கிறது. ரசிகர்கள் உற்சாகத்துடன் படத்தினை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், ஒரு திரையரங்கில் இந்த படம் ஓடிக்கொண்டிருந்த வேளையில் ரசிகர்கள் சில்லறை காசுகளை திரையை நோக்கி வீசும் வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

ரவீனா டாண்டன்

பிரபல மாடலும் பாலிவுட் நடிகையுமான ரவீனா டாண்டன் கேஜிஎஃப் 2 வில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இவர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் திரையரங்கு ஒன்றில் படத்தின் இறுதி காட்சியில் ரசிகர்கள் சில்லறைகளை வீசுகிறார்கள். அதோடு, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. அப்பதிவில் ரவீனா," பல நாட்கள் கழித்து தியேட்டரில் மக்கள் காசுகளை விசுவதை பார்க்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் வெற்றிநடைபோடும் கேஜிஎஃப் 2 திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் சில்லறை காசுகளை சிதறவிட்ட வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

 

Tags : KGF2, KGF, Yash

தொடர்புடைய இணைப்புகள்

Raveena Tandon shares clip people throwing coins in theatre KGF2

People looking for online information on KGF, KGF2, Yash will find this news story useful.