ரவீனா தாஹா வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்.. விலை மட்டும் இம்புட்டா? அப்படி என்ன ஸ்பெஷல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரை நடிகையாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரவீனா தாஹா.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: கீர்த்தி சுரேஷின் 2 கோடி ரூபாய் சொகுசு கார்.. இவ்வளவு வசதிகள் இருக்கா? குட்டி கப்பல்!

2018 ஆம் ஆண்டு வெளிவந்த ராட்சசன் படத்தில் ஷர்மி எனும் பள்ளிச் சிறுமியாக நடித்தவர் தான் ரவீனா தாஹா. இதற்கு முன்பே ரவீனா விஜய் நடித்த ஜில்லா (2014) படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.  அதன் பின்னர் 2016-ம் ஆண்டு வெளியான ‘கதை சொல்லப் போறோம்’  படத்தில் நடித்திருந்தார்.

சன் டிவி சேனலில் ஒளிபரப்பான தங்கம் மெகா தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார் ரவீனா தாஹா. Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'பூவே பூச்சூடவா' சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் இவரது கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது விஜய் டிவியின் மௌன ராகம் 2 சீரியலில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரவீனா தாஹாவுக்கு அவரது தாயார் புதிய MG ஹெக்டர் ப்ளஸ் காரை பிறந்தநாளுக்கு பரிசளித்து உள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த கார் சென்னையில் 16.5 லட்ச ரூபாய் முதல் 20 லட்ச ரூபாய் வரை விற்கப்படுகிறது. டீசல் & பெட்ரோல் என இரண்டு வகைகளில் இந்த கார் கிடைக்கிறது. லிட்டருக்கு 17 கிமீ மைலேஜ் தரவல்லது. 1955 சிசி இன்ஜின் கொண்டது. 6-7 நபர்கள் பயணிக்கும் வசதி கொண்டது. இந்த கார் 155 லிட்டர் பூட் ஸ்பேஸ் கொண்டது.

 

Also Read | VIDEO: கார்த்தி நடிக்கும் 'சர்தார்'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட்! முழு விவரம்

ரவீனா தாஹா வாங்கிய விலையுயர்ந்த சொகுசு கார்.. விலை மட்டும் இம்புட்டா? அப்படி என்ன ஸ்பெஷல்! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

Raveena Daha Mother Gifted MG Hector Plus Car Specifications

People looking for online information on MG Hector Plus Car, MG Hector Plus Car Specifications, Raveena Daha, Raveena Daha new car will find this news story useful.