நடிகர் விஜய் நடிப்பில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் 'லியோ' படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | பிக் பாஸ் ஆரியின் Thorwback ப்ரொபோஸல் Scene.. இந்த படத்துலயா? ட்ரெண்ட் செய்யும் ரசிகர்கள்!!
இந்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை த்ரிஷா நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ் ஆகியோர் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ராக்ஸ்டார் அனிருத், லியோ படத்திற்காக நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் கைகோர்த்துள்ளார். இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிலோமின் ராஜூம், கலை இயக்குனராக N.சதீஷ்குமாரும், நடன இயக்கத்தை தினேஷ் மாஸ்டரும் மேற்கொள்கிறார்கள்.
Images are subject to © copyright to their respective owners.
இந்த படத்தின் வசனங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இயக்குனர் ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். சண்டை காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்க உள்ளனர். நிர்வாக தயாரிப்பாளராக ராம்குமார் பாலசுப்பிரமணியன் பொறுப்பேற்றுள்ளார்.
S.லலித்குமார் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிசாமி இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி 2ஆம் தேதி துவங்கியது. அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட லியோ படத்தின் வசனகர்த்தா ரத்ன குமார் படம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்தார். குறிப்பாக, "லியோ படத்தின் தலைப்பு ஆங்கிலத்தில் ஏன் வைக்கப்பட்டது?" என்ற கேள்விக்கு "இது ஒரு பான் இந்திய படமாக வெளியாக உள்ளது. அதற்கு சிறிய அளவில் எல்லாருக்கும் புரியும் வார்த்தையாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதால் இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளது." என ரத்ன குமார் பதில் அளித்துள்ளார்.
Also Read | விஜய் நடிக்கும் 'LEO'.. காஷ்மீரில் இருந்து லீக் ஆன வீடியோவுக்கு தயாரிப்பாளரின் பரபர RETWEET!