'மாநகரம்' படத்துக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி, கார்த்தி ஹீரோவாக நடித்துள்ள படம் 'கைதி'. இந்த படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் டிரெய்லர் நேற்று (October 7 ) வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து தளபதி 64 படத்தை இயக்கிவருகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதி, சாந்தணு, மாளவிகா மோகனன், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த படத்தில் மேயாத மான், ஆடை படங்களின் இயக்குநர் ரத்னகுமார் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார்.
இந்நிலையில் கைதி படத்தின் டிரெய்லரை பகிர்ந்த ரத்னகுமார், ''கொஞ்ச மாசமா 'தளபதி 64' படத்தோட டைரக்டர் னு தான தெரியும். என்ன பண்ணிட்டு இங்க வந்தேன் னு தெரியாதுல கைதி டிரெய்லர் சூர மாஸ் என்று கைதி பட டயலாக்கை இயக்குநர் லோகேஷ் கனகராஜை குறிப்பிடும் வண்ணம் தெரிவித்துள்ளார்.