மேயாத மான், ஆடை ஆகிய படங்களின் இயக்குனரும், விக்ரம, மாஸ்டர் படங்களின் எழுத்தாளருமான ரத்னகுமார் இயக்கத்தில் "குலு குலு" திரைப்படம் உருவாகி உள்ளது.
Also Read | முதல்முறையாக பிரபல இந்தி TV சேனலில் சிவகார்த்திகேயனின் 'DON'.. எப்போ? எதுல?
இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் ஜூலை 29-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த குலுகுலு திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை பிரபல டிவி சேனலான சன்.டிவி. கைப்பற்றியுள்ளது. இந்த படத்தின் ஆடியோ உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே இந்த படத்தின் OTT உரிமத்தை சன் நெட்வொர்க்கின் சன் நெக்ஸ்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்த நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தில் சந்தானம், 'நக்கலைட்ஸ்' கவி, 'முதல் நீ முடிவும் நீ' ஹரீஷ், நமீதா கிருஷ்ணமூர்த்தி, யுவராஜ், மெளரீஷ், அதுல்யா சந்த்ரா, ஜார்ஜ் மரியம், லொள்ளு சபா சேஷூ, லொள்ளு சபா மாறன் ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் குறித்து பிஹைண்ட்வுட்ஸ்க்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ள இயக்குநர் ரத்னகுமார், “என்னை பொருத்தவரை சந்தானம் ஒரு பெஃபார்மர், அவரை ஒரு குறுகிய வளையத்துக்குள் வைத்துவிட்டதாக கருதுகிறேன், அவர் Open up ஆகவேண்டும் என நினைக்கிறேன். இந்த குலு குலு படத்தில் நிறையவே Open up ஆகி இருக்கிறார், இன்னும் Open up ஆனால் நிறைய பன்முக படங்களை பண்ணுவார். அவர் இந்த கதையை தேர்வு செய்ததற்கு காரணமும் அதுதான்.
சந்தானம் இந்த குலு குலு படத்தில், “என் படத்தில் நான் என்ன பண்ணுவேனோ அது மட்டும் இதில் இருக்காது, ஆனால் என் படத்தில் இருப்பதெல்லாம் இதில் இருக்கும்” என்றார். ஷூட்டிங் செட்டில் யோகி மாதிரி சைலண்ட்டாக இருந்தார். அந்த அமைதி இந்த கேரக்டருக்கு முக்கியமாக இருந்தது. இந்த கேரக்டரை அணுகுவதற்காக அர்ப்பணிப்புடனேயே அப்படி இருந்திருக்கிறார். அவருக்கு சைலண்ட்டாக நன்றாகவே பெர்ஃபாம் பண்ணுகிறார். அதாவது அவர் பேசாமல், மற்றவர்கள் பேசும்போது பாடி லாங்குவேஜாலும், மேனரிஸத்திலும் ஸ்கோர் பண்ணுவார்.
சந்தானத்தால் நிறைய விதமான எமோஷனை பிடிக்கிறார். இந்த படத்தில் அழுகிறார். அது எப்படி செய்தார் என தெரியவில்லை. நானே கேட்டுவிட்டேன், சிறுவயதின் நினைவுகள் ஏதேனும் காரணமா? என கேட்டேன். அவர் கூலாக, ‘அதெல்லாம் இல்லப்பா.. நீ சொல்லும் காட்சிக்கு அதைத்தானே செய்ய வேண்டும். அதற்கு தானே சம்பளம் வாங்குகிறேன்’ என்றார்.
இந்த படத்தில் நடித்த இளைஞர்களுக்கு நீச்சலே வராது போல, ஆனால் கடலுக்கு போங்க என்றதும் ஓடிவிட்டனர். இதேபோல் அதுல்யா எனும் நடிகை ரியலாகவே பாத்ரூமின் வாசலில் அமரும் காட்சிக்காக அசரவைத்துவிட்டார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read | ஆஹா..உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் "லால்சிங் சத்தா".. வெளிவந்த அடுத்த சூப்பர் போஸ்டர்!