லோகேஷுடன் இயக்குனர் ரத்ன குமார்.. அடுத்த படம் பற்றி கொடுத்த ஹிண்ட்??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதியன்று வெளியாகி இருந்த திரைப்படம் 'விக்ரம்'. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். மேலும் நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

Advertising
>
Advertising

இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் ஆனதில் இருந்தே அதன் மீதான எதிர்பார்ப்பு, மிக உயரத்தில் இருந்தது. அவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக, விக்ரம் படம் ரிலீஸ் ஆகி, மக்கள் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றிருந்தது.

அது மட்டுமில்லாமல், கலெக்ஷன் ரீதியாகவும் நிறைய சாதனைகளை முறியடித்து, சுமார் 50 நாட்களைக்  கடந்து, திரை அரங்கிலும் வெற்றிகரமாக ஓடி இருந்தது.

நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ், விக்ரம் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மிக அற்புதமாக எடுத்திருந்தார். விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, அடுத்து லோகேஷ் கனகராஜ் யார் படத்தை இயக்க போகிறார் என்ற ஆவல், ரசிகர்கள் மத்தியில் பரவலாக இருந்து வந்தது.

Behindwoods விருது மேடையில் கூட, விஜய்யின் "Thalapathy 67" படத்தை இயக்குவது பற்றி சூசகமாக லோகேஷ் கூறி இருந்தார். ஆனால், இதுவரை அது பற்றி உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதற்கு மத்தியில், கடந்த சில தினங்களுக்கு முன்பாக, தனது அடுத்த திரைப்படத்தின் பணிகள் காரணமாக, சமூக வலைத்தளங்களில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்வதாகவும் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபல இயக்குனர் ரத்னகுமார், லோகேஷ் கனகராஜுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதில் போட்டுள்ள கேப்ஷன் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. நடிகர் சந்தானத்தை வைத்து "குலு குலு' என்னும் திரைப்படத்தை ரத்னகுமார் இயக்கி இருந்தார். சமீபத்தில் வெளியாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.

இதனிடையே, லோகேஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தற்போது பகிர்ந்த ரத்னகுமார், தனது கேப்ஷனில், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை குறிப்பிட்டு, 1 முதல் 10 எண்கள் வரை ஸ்மைலியில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அதன் நடுவில் வரும் 6 மற்றும் 7 எண்களுக்கு பதிலாக, Fire ஸ்மைலிகளை ரத்னகுமார் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், Thalapathy 67 படம் தொடர்பாக தான் அவர்கள் பணிகளில் ஈடுபட்டு வருவதை ஒரு புதிருடன் ரத்னகுமார் தெரிவித்துள்ளதாக ரசிகர்கள் பலரும், அவரது ட்வீட்டின் கமெண்ட்டில் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Rathna kumar shares a recent picture with lokesh kanagaraj

People looking for online information on Gulu Gulu, Lokesh Kanagaraj, Rathna Kumar, Vikram will find this news story useful.