நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர்.
‘இன்கேம் இன்கேம் காவாலி’ என்ற பாடல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடல் பிரபலமடைந்த ராஷ்மிகா, கடந்த 2016 ஆம் ஆண்டு ‘கிரிக் பார்ட்டி’ என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். பின்னர் விஜய் தேவர் கொண்டாவுடன்‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததன் மூலமும், பின்னர் தமிழில் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்ததன் மூலமும் தமிழ் ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தார்.
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா படத்தில் நடித்து இருந்தார். தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கி வரும் வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். ஐதராபாத்தில் தற்போது நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பிற்கு சென்ற நடிகை ராஷ்மிகா மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய்யுடன் இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை அண்மையில் பகிர்ந்தார்.
இந்நிலையில்தான் நடிகை ராஷ்மிகா மந்தனா ஒரு நபரை தேடும் தகவல் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. ஆம், புஷ்பா படத்தில் இடம்பெற்ற சாமி சாமி பாடல் ரஷ்மிகா நடிப்பில் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. ஸ்ரீவள்ளியாக இந்த படத்தில் நடித்த ராஷ்மிகா, இப்படத்தில் ஒரு சிக்னேச்சர் ஸ்டெப்புக்கு நடனம் ஆடியிருந்தார். இந்த பாடலுக்குதான் தறோஒது பள்ளி சிறுமி ஒருவர் செம்ம க்யூட்டாக நடனமாடி இருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வரும் இந்த வீடியோவை தன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா, “இந்த கியூட் சிறுமியை நான் நேர்ல பார்க்கணும்.. எப்படி பாக்குறது? ” என்று கேட்டிருந்தார். ராஷ்மிகா மந்தனாவின் இந்த பதிவு வைரலாகி வருகிறது.