CHILDRENS DAY தினத்தன்று.. ராஷ்மிகா பகிர்ந்த 'இன்ஸ்டா' பதிவு.. வைரலாகும் கேப்ஷன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தென் இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரைப்படமான கிரிக் பார்ட்டி மூலம் அறிமுகமான ராஷ்மிகா, இதனைத் தொடர்ந்து தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப் படங்களிலும் நடித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | துணிவு ஷூட்டிங்கில் அஜித்துடன் டான்ஸ் மாஸ்டர் கல்யாண்.. வைரலாகும் BTS போட்டோ..!

அதிலும் குறிப்பாக, கீதா கோவிந்தம், டியர் காம்ரேட், புஷ்பா 1 உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் அவரை பிரபலம் ஆக்கியத்துடன் இந்திய அளவிலும் அதிக ரசிகர்களை பெற்று கொடுத்திருந்தது.

தமிழில் நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்திருந்த ராஷ்மிகா, தற்போது நடிகர் விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் 'வாரிசு' திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே, தெலுங்கில் சீதா ராமம், ஹிந்தியில் அமிதாப் பச்சனுடன் ராஷ்மிகா இணைந்து நடித்திருந்த Goodbye திரைப்படமும் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், குழந்தைகள் நாளான இன்று ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ள பதிவு தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

நவம்பர் 14 ஆம் தேதியான இன்று, குழந்தைகள் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. பள்ளிகளில் கூட குழந்தைகள் நாளன்று பல போட்டிகள் மற்றும் விழாக்கள் நடந்து வருகிறது. பள்ளிக் காலத்தை முடித்த நபர்களும் தங்களின் சிறு வயது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராஷ்மிகாவும் இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கருத்து தெரிவித்துள்ளார். தனது நாயுடன் ஊஞ்சலில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த ராஷ்மிகா, "பள்ளிக் கால தினங்களில் குழந்தைகள் நாள் என்பது மிகப் பெரிய கொண்டாட்டமாக இருக்கும். அதை அறிவதற்கு முன்பே மிகவும் வேகமாக நாங்கள் வளர்ந்து விட்டோம். இத்தனை ஆண்டுகளில் நான் கற்றுக் கொண்டது, வாழ்க்கை மிகவும் குறுகியது. எனவே உங்கள் வாழ்க்கையை முழுமையாக வாழுங்கள்" என குறிப்பிட்டு தனது நாய் மற்றும் பூனை உள்ளிட்டவற்றிற்கு குழந்தைகள் நாள் வாழ்த்துக்கள் சொல்லி மற்ற அனைவருக்கும் குறிப்பிட்டு மற்ற அனைவருக்கும் குழந்தைகள் நாள் வாழ்த்துக்களையும் குறிப்பிட்டுள்ளார்.

ராஷ்மிகா மந்தனாவின் குழந்தைகள் நாள் வாழ்த்து குறித்த இன்ஸ்டா பதிவு தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

 

Also Read | எப்புடுறா டக்குனு திருந்த முடியும்..! - அசீம் பற்றி கிசுகிசுத்த மைனா - ஆயிஷா .. வைரல் ப்ரோமோ bigg boss 6

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika mandanna post a picture in childrens day

People looking for online information on Childrens day, Rashmika Mandanna, Rashmika mandanna latest post will find this news story useful.