நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல போட்டோகிராபருடன் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
Also Read | 8 பேக் உடற்கட்டில் ஷாருக்கான்.. ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய பதான் படத்தின் மிரட்டலான BTS PHOTO!
நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில் "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.
2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் 3.36 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.
மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார். இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது அடுத்த படமான 'குட்பாய்' படத்தின் ப்ரோமோஷன் Photoshoot-ல் கலந்து கொண்டுள்ளார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த போட்டோ ஷூட் புகைப்படங்களை ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்களை பிரபல போட்டோகிராஃபர் தேஜஸ் நெரூர்கர் எடுத்துள்ளார். நடிகர் கமல்ஹாசனின் House of கதர் நிறுவனம் இந்த உடையை வடிவமைத்துள்ளது. ராஷ்மிகா மந்தனா & அமிதாப் பச்சன் நடிக்கும் குட் பாய் படம் வரும் அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | சூர்யா - சிறுத்தை சிவா இணையும் புதிய படம்.. தயாரிப்பாளர் வெளியிட்ட பரபர அறிக்கை