தளபதி-66 படத்துக்கு தயாராகுறாங்களோ? ராஷ்மிகாவின் வேற லெவல் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ ரிலீஸ் ஆகி உள்ளது.

Advertising
>
Advertising

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது. இந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்ஃபேர் விருதை வென்றார்.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். சமீபத்தில் அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

கடந்த ஆண்டு சமீபத்தில் தான், தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்க உள்ளார் என்ற அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் தளபதி விஜய்யுடன் இணைகிறார் என்ற தகவல் வெளியானது. மேலும் விஜய்க்கு ஜோடியாக இந்த படத்தில்  ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தளபதி 66 புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் பாடல் காட்சிக்கு மிகப்பெரிய செட்டில் விஜய் & ரஷ்மிகா மந்தனா நடனத்துடன் படப்பிடிப்பு துவங்குகிறது.

அன்றைய தினம் உகாதி, தில்ராஜூ தெலுங்கு தயாரிப்பாளர் என்பதால் அந்த தேதியை தேர்வு செய்து தொடங்குகிறார். இந்த படப்பிடிப்பிற்கு தயாராவது போல் தற்போது உடற்பயிற்சி வீடியோ வெளியாகி உள்ளது. 

தளபதி-66 படத்துக்கு தயாராகுறாங்களோ? ராஷ்மிகாவின் வேற லெவல் ஜிம் ஒர்க் அவுட் வீடியோ! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna New Gym Work Out Video went Viral

People looking for online information on விஜய், Rashmika Mandanna, Thalapathy66, Vijay66 will find this news story useful.