பழைய டிரெண்டை மீண்டும் ஆரம்பித்த ராஷ்மிகா மந்தனா.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனா தனது லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | நடிகை திவ்யபாரதி லேட்டஸ்ட் போட்டோ ஷூட்.. பிரபல போட்டோஃகிராபர் எடுத்த வைரல் ஃபோட்டோஸ்!

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் இந்த ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  2 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்துக்கு White T Series என ஹேஸ்டேக் போட்டு பதிவிட்டுள்ளார். இந்த White T Series  புகைப்படங்களை ரோஹன் ஸ்ரெஸ்தா எடுத்துள்ளார். ரோஹன் ஸ்ரெஸ்தா தான் எடுக்கும் மோனோக்ரோம் புகைப்படங்களுக்கு மாடல்களை வெள்ளை டி-சர்ட் உடையுடன் காணப்படுவர். கடந்த 8 ஆண்டுகளாக  White T Series புகைப்படங்கள் டிரெண்ட் ஆகி வருகின்றன.

இந்த சீரிஸ் புகைப்படங்களில் அனுஷ்கா சர்மா, ஸ்ரதா கபூர், சானியா மிர்சா, அல்லு அர்ஜூன், திஷா பதானி, இலியானா, ஹர்தீக் பாண்டியா, ஷாருக்கான், ரன்பீர் கபூர், ஆலியா பட், விராத் கோலி தோன்றியுள்ளனர்.

Also Read | விஜய் ஆண்டனி - சரத்குமார் நடிக்கும் புதிய படம்.. பிரபல நடிகருக்கு டப்பிங் பேசிய தமிழ் நடிகர்!

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna Latest Photoshoot with Rohan Shrestha White T Series

People looking for online information on Rashmika Mandanna, Rashmika Mandanna Latest Photoshoot will find this news story useful.