திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா.. வைரல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா, திண்டுக்கல் மாவட்டத்தில் சுற்றுலா வந்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் பிரபலமானவர். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். 

அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

ராஷ்மிகா மந்தனா & அமிதாப் பச்சன் நடித்த 'குட்பாய்' படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தமிழில் கடந்த பொங்கலுக்கு வெளியான வாரிசு படத்திலும் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்தார். ராஷ்மிகா மந்தனா, தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்து வருகிறார். இந்த அனிமல் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. மேலும் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திலும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தமது 28-வது பிறந்தநாளை  கொண்டாடி இருந்தார். இந்நிலையில் கோடை காலத்தை ஒட்டி தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைக்கு சுற்றுலா வந்துள்ளார். கொடைக்கானல் மலையில் இருந்து புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna at Dindigul Kodaikanal Hills

People looking for online information on Rashmika Mandanna will find this news story useful.