பிரபல ஸ்டார் ஹோட்டலில் ராஷ்மிகா மந்தனா.. 16 வகை உணவுகளுடன் வேறலெவல் விருந்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ராஷ்மிகா மந்தனா, பிரபல நட்சத்திர விடுதியில் உணவருந்தும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | தோழிகளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய நடிகை மீனா.. வைரலாகும் சூப்பர் வீடியோ!

நடிகை ராஷ்மிகா மந்தனா 2016 ஆம் ஆண்டு கன்னட திரையுலகில் Kirik Party படத்தில் அறிமுகமானார். தெலுங்கில்  "சலோ" படத்தில் 2018 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்தார். பின்னர் அதே ஆண்டு வெளியான "கீதா கோவிந்தம்" திரைப்படம் அவரை இந்திய அளவில் புகழ் பெற வைத்தது.

2020 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு உடன் ஜோடி சேர்ந்த Sarileru Neekevvaru படத்தின் மூலம் முன்னணி கதாநாயகியானார். தமிழில் கார்த்தி நடிப்பில் வெளியான "சுல்தான்" படத்தின் மூலம் அறிமுகமானார். கடந்தாண்டு அல்லு அர்ஜூனுடன் "புஷ்பா" படத்தில் நடித்து இந்திய முழுக்க முன்னணி நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில்  3.3 கோடி ரசிகர்கள் பின் தொடரும் முதல் தென்னிந்திய நடிகை என்ற சாதனையை படைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தனா.

மேலும் தற்போது ரன்பீர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்திலும், விஜய்க்கு ஜோடியாக வாரிசு படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த வாரிசு படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா வாரிசு படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு இடைவெளியில் தனது அடுத்த படமான 'குட்பாய்' படத்தின் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ள டெல்லி சென்றுள்ளார்.

டெல்லி சென்றுள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக ராஷ்மிகா மந்தனா பதிவிட்டுள்ளார். மேலும் 16 வகை உணவுகளுடன் அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

Also Read | இமயமலையில் பைக் ரிப்பேர்.. உதவி கேட்ட நபர்.. மெக்கானிக்காக மாறிய நடிகர் அஜித்! ருசிகர சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna at Delhi Gulati Restaurant Pandara Road

People looking for online information on Delhi Gulati Restaurant, Rashmika Mandanna will find this news story useful.