பாலிவுட் நடிகருடன்.. அரபிக்குத்து டான்ஸ் போட்ட 'தளபதி 66' நடிகை.. மூவ்மென்ட்ஸ் சும்மா அள்ளுது

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் நெல்சன் திலீப்குமர், தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார்.

Advertising
>
Advertising

ஜூலியை தள்ளிவிட்ட பாலா.. மூச்சு விடத் திணறிய ஜூலி. "என்ன நடந்துச்சு??.." பதறிப் போன ரசிகர்கள்

இதன் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்துள்ள நிலையில், ஏப்ரல் மாதம் திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தின் வெளியீடு, தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாகலாம் என்றும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யின் 'பீஸ்ட்'

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு உள்ளிட்ட பலரும் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஆட்டம் போட வைத்த அரபிக்குத்து

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலுக்கு அனிருத் அமைத்த இசை, ஒட்டுமொத்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரையும் நடனம் போட வைத்துள்ளது.

இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, பூஜா ஹெக்டே, இயக்குனர் அட்லி, நடிகை கனிகா உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர். அந்த வரிசையில், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆகியோர் இணைந்துள்ளனர்.

ராஷ்மிகா - வருண் தவான்

ராஷ்மிகா மற்றும் வருண் தவான் ஆகியோர் கடற்கரை ஒன்றின் அருகே, அரபிக்குத்து பாடலுக்கு இணைந்து ஆடும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இதனை, வருண் தவான் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அப்படியே அச்சு அசலாக நடன அசைவுகளை, அசத்தல் முக பாவனைகளுடன் இருவரும் செய்து ஆட, வீடியோவுக்கு ஹார்ட்டுகளை அள்ளிப் போட்டு கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

தளபதி 66

தளபதி 66 படத்தினை தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கவுள்ள நிலையில், இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தளபதி 66 புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் தேதியில் இருந்து துவங்கும் என நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை கோகுலம் ஸ்டுடியோவில், பாடல் காட்சிக்கு மிகப்பெரிய செட்டில் விஜய் & ரஷ்மிகா மந்தனா நடனத்துடன் படப்பிடிப்பு துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

"வந்த அன்னைக்கே நோண்டுறாங்களே" ரம்யாவிடம் சரமாரி கேள்விகள்..லெஃப்ட்,ரைட் வாங்கிய அனிதா,தாமரை

 

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna arabic kuthu dance with Varun dhawan

People looking for online information on Arabic kuthu dance, அரபிக்குத்துக்கு டான்ஸ், தளபதி 66, Beast Movie, Rashmika Mandanna, Thalapathy 66, Varun Dhawan, Vijay will find this news story useful.