THALAPATHY66: விஜய்யுடன் முதல் நாள் ஷூட்டிங்.. துள்ளிக்குதித்த ராஷ்மிகா! வியந்து போட்ட வைரல் பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐத்ராபாத்: விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சிவகார்த்திகேயனின் DON.. குறித்த நேரத்தில் ரிலீஸ்! உலகெங்கும் வெற்றிகரமாக விநியோகம்

தளபதி 66 படத்தினை வம்சி படிப்பள்ளி இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தெலுங்கானா மாநிலம் ஐத்ராபாத்தில் முழு வீச்சில் நடந்து வருகிறது.

நேற்று 11.05.2022 அன்று படத்தில் விஜய் - யோகி பாபு - ராஷ்மிகா மந்தனா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்த படப்பிடிப்பு குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அன்புள்ள நாட்குறிப்பு, 11/5/22,

நாளை தொடங்குவதற்கு முன்பு மிகவும் தேவையான சில கார்டியோ உடற்பயிற்சி செய்தேன். நான் கடந்த 25 நாட்களாக இதை செய்து வருகிறேன்.

"படப்பிடிப்புக்கு தயாரானேன்"

“என்னுடைய மேக்கப் மற்றும் முடியை சரி செய்து கொண்டு செட்டுக்கு சென்று வம்சி சாரையும் விஜய் சாரையும் சந்தித்தேன். யோகி பாபு சார் மற்றும் குழுவினர் இருந்தனர்.

இது மிகவும் நன்றாக இருந்தது. அவர்களுடன் அதிக நேரம் செலவழித்ததில் மகிழ்ச்சி. படப்பிடிப்பு நன்றாக நடந்தது. மாலை 4/5 மணிக்குள் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. பின் நான் செட்டில் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து தூங்கிவிட்டேன். எந்த இடத்திலும் என்னால் தூங்க முடியும். உண்மையில் அந்த கொடுப்பினை எனக்கு உள்ளது. எனக்கு என்ன ஒரு அழகான நாள் இது!" என இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த படம் பேமிலி டிராமா வகைமையில் உருவாகிறது என்றும், படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சென்னையில் உள்ள தனியார் ஸ்டூடியோவில் நடைபெற்றது. இதில் இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில் ராஜூ, ராஷ்மிகா மந்தனா, நடிகர் விஜய் கலந்து கொண்டனர். இந்த பூஜையில் நடிகர் சரத்குமாரும் கலந்து கொண்டுள்ளார். இந்த படத்தில் விஜய் உடன் முதல்முறையாக இணைந்து சரத்குமார் நடிக்க உள்ளார். இவர்கள் போக நடிகர் பிரபு, ஷ்யாம், ஜெய சுதா, பிரகாஷ் ராஜ், யோகிபாபு ஆகியோரும் நடிக்கின்றனர். நடிகை சங்கீதா, நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்த படக்குழுவில் இணைந்துள்ளார்.  இதனை படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த படத்தில் எடிட்டராக பிரவீன் கே எல் இணைந்துள்ளார். விஜய்யின் பைரவா படத்தின் எடிட்டரும் இவர் தான். வமசியின் சில படங்களில் எடிட்டராகவும் பணியாற்றி உள்ளார். இப்படத்திற்கு வம்ஷி பைடிப்பள்ளியுடன் இணைந்து கதை, திரைக்கதையை ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன் எழுதியுள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய உள்ளார்

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

THALAPATHY66: விஜய்யுடன் முதல் நாள் ஷூட்டிங்.. துள்ளிக்குதித்த ராஷ்மிகா! வியந்து போட்ட வைரல் பதிவு வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika Mandanna about Vijay Yogibabu Vamsi at Thalapathy66 shoot

People looking for online information on Rashmika Mandanna, Thalapathy 66 Movie, Thalapathy 66 Movie updates, Vamsi, Vijay, Yogibabu will find this news story useful.