"வாரிசு படத்தோட GOOSEBUMP தருணம்".. திரை தீப்பிடிக்கும் 🔥 .. எதிர்பார்ப்பை எகிற வைத்த ராஷ்மிகா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக 'வாரிசு' திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 11.01.2023 அன்று திரை அரங்குகளில் வெளியாகிறது. வாரிசு திரைப்படத்தை இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கி உள்ளார்.

Advertising
>
Advertising

வாரிசு படத்தில் நடிகர் விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு, ஹரி மற்றும் ஆஷிஷோர் சாலமன், விவேக் இணைந்து கதை & கூடுதல் திரைக்கதை எழுதி உள்ளனர். இசை மற்றும் ஒளிப்பதிவு முறையே எஸ் தமன் மற்றும் கார்த்திக் பழனி கவனித்துள்ளனர். கேஎல் பிரவீன் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார்.

மேலும் இந்த படத்தை தயாரிப்பாளர்கள் தில் ராஜு & ஷிரிஷின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாரிக்கிறார்கள். வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா, கடந்த டிசம்பர் 24 ஆம் தேதியன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் வைத்து நடைபெற்றிருந்தது.

இந்த நிகழ்வில், விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர். வாரிசு படத்தின் 5 பாடல்களும் வெளியாகி இருந்தது.

இதற்கு அடுத்தபடியாக, சமீபத்தில் வாரிசு படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிலையில், வாரிசு படத்தின் நடிகை ராஷ்மிகா மந்தனா Behindwoods TV சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், வாரிசு திரைப்படம் குறித்தும், நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு சுவாரஸ்ய தகவல்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும், வாரிசு திரைப்படத்தின் Goosebumps தருணம் பற்றியும், எந்தவொரு குறிப்பிட்ட தருணத்தில் மொத்த் திரை அரங்கும் தீப்பிடிக்க போகிறது என்ற கேள்விக்கும் பதிலளித்த ராஷ்மிகா, "ரஞ்சிதமே பாடலில் ஒன்றரை நிமிடம் சிங்கிள் ஷாட் டான்ஸ் பண்ணி இருக்காங்க. அத பாக்குறப்போ மக்கள் அனைவரும் டான்ஸ் ஆட போறாங்க, கத்த போறாங்க. அது ஒரு Goosebump பாய்ண்ட். அதுக்கு அடுத்தது விஜய் சாரோட லுக்ஸ். அவருடைய லுக்கெல்லாம் அவரோட ஃபேன்ஸ் மத்தியில ட்ரெண்டா மாற போகுது" என ராஷ்மிகா கூறினார்.

"வாரிசு படத்தோட GOOSEBUMP தருணம்".. திரை தீப்பிடிக்கும் 🔥 .. எதிர்பார்ப்பை எகிற வைத்த ராஷ்மிகா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Rashmika about Vijay varisu goosebump moments exclusive

People looking for online information on Rashmika Mandanna, Varisu, Vijay will find this news story useful.