உலகின் உயரமான புர்ஜ் கலிபா கட்டிடத்தில் 83 படத்தின் விழா! கலந்து கொண்ட தீபிகா - ரன்வீர் ஜோடி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்தியை மூலமாக கொண்டு ரன்வீர் சிங், ஜீவா, தீபிகா படுகோனே நடிப்பில் 83 படம் தாயாராகி உள்ளது. 

Advertising
>
Advertising

இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியாகிறது. இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. 1983 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தி கோப்பையை வென்றது. இதனை மையமாக வைத்தும் கபில்தேவின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டும் 83 படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் ரோலில் தமிழ் நடிகர் ஜீவாவும், கபில் தேவாக நடிகர் ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர். இதில் கபில் தேவ் மனைவி கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனே நடிக்கிறார். ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரன்வீர் சிங் தீபிகா படுகோனே இந்தப்படத்தை தயாரிக்கின்றனர். இந்தப்படத்தின்  டீசர் ஏற்கனவே (26.11.2021) வெளியாகி உள்ளது.இந்த படத்தின் டிரெய்லர்  நவம்பர் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த படம் டிசம்பர் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டுள்ளது.

பட ரிலீசை முன்னிட்டு படத்தை விளம்பரபடுத்த படக்குழு பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக  ’83’ படத்தின் டிரெய்லர் வீடியோ தொகுப்பை துபாயில் உள்ள உலகின்உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் இடம்பெறச் செய்துள்ளது 83 பட தயாரிப்பு தரப்பு. 163 மாடிகளைக் கொண்ட புர்ஜ் கலிஃபா 828 மீட்டர் நீளம் கொண்டது. இந்த உலகின் உயரமான கட்டிடத்தில் ரன்வீர் சிங் உருவத்தோடு வீடியோ ஒளிபரப்பானது. இந்த நிகழ்வில் ரன்வீர் சிங் தனது மனைவி தீபிகா படுகோனுடன் கலந்து கொண்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ranveer Singh Deepika Padukone 83 film Promotion at Burj Khalifa

People looking for online information on 83, ஜீவா, தீபிகா படுகோனே, ரன்வீர் சிங், Burj Khalifa, Deepika Padukone, Jiiva, Kapil Dev, Ranveer Singh will find this news story useful.