ரஞ்சிதமே பாடல் ஷூட் முடிஞ்சதும் விஜய் SIR சொன்னது" 🥰 ... வைரல் டான்சர் அம்பிகா ஷேரிங்ஸ்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகி இருந்த திரைப்படம் 'வாரிசு'. இந்த திரைப்படம் பெரிய அளவில் ஹிட்டாகி இருந்த சூழலில், எஸ் தமன் இசையில் உருவாகி இருந்த பாடல்களும் பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்திருந்தது.

Images are subject to © copyright to their respective owners

Advertising
>
Advertising

அதிலும் குறிப்பாக, நடிகர் விஜய் மற்றும் மானசி ஆகியோர் பாடி இருந்த "ரஞ்சிதமே" பாடல், சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இந்த பாடலின் வீடியோவில் மற்றொரு சிறப்பம்சமாக நடிகர் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோர், சுமார் ஒன்றரை நிமிடம் வரை சிங்கிள் ஷாட்டில் நடனமாடி இருந்தனர். ஃபுல் எனர்ஜியுடன் அனைவரும் ஆடி இருந்த ரஞ்சிதமே பாடலின் வீடியோவும் திரை அரங்கில் ரசகர்களை துள்ளல் போட வைத்திருந்தது.

இந்த பாடலில் விஜய் மற்றும் ராஷ்மிகா ஆகியோரின் நடனம் ஒரு பக்கம் கவனம் ஈர்த்தாலும் விஜய்க்கு அருகே ஆடி இருந்த பெண் ஒருவரும் பலரை வெகுவாக கவர்ந்திருந்தார். ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு அருகே சிவப்பு நிற புடவை அணிந்தபடி ஒரு இளம்பெண் நடனமாடி இருப்பார். மிகவும் எனர்ஜியுடன் பட்டையைக் கிளப்பி இருந்த அவரது நடனம், இணையவாசிகள் மத்தியில் கவனம் பெற்றிருந்தது.

அவரது பெயர் அம்பிகா கோலி ஆகும். மேலும் மும்பையைச் சேர்ந்த இவர் ஏராளமான பாலிவுட் திரைப்படங்களிலும் பேக்ரவுண்ட் டவுன்சராக ஆடியுள்ளார். தொடர்ந்து, வாரிசு படத்தில் வரும் ரஞ்சிதமே பாடல் அவரை தமிழக் மக்கள் மத்தியிலும் பிரபலம் ஆக்கி உள்ளது.

இந்த நிலையில், டான்சர் அம்பிகா கோலி, Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ரஞ்சிதமே பாடல் நடன அனுபவம் குறித்து பல்வேறு சுவாரஸ்ய தகவலை அம்பிகா கோலி பகிர்ந்து கொண்டார். மேலும் நடிகர் விஜய் குறித்தும், நடிகை ராஷ்மிகா குறித்தும் பேசி இருந்தார்.

அதேபோல ரஞ்சிதமே பாடலில் சிங்கள் ஷாட் நடனம் ஆடி முடித்த பிறகு நடிகர் விஜய் ஏதாவது உங்களிடம் பேசினாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த அம்பிகா கோலி, "அவர் நடனமாடி முடித்த பிறகு என்னை Hug செய்து நாங்கள் அனைவரும் சிறப்பாக ஆடியதாக கூறினார். நாங்கள் நடனம் ஆடிய பிறகு அவரை பார்ப்பதற்காக போயிருந்தோம். நீங்கள் அனைவரும் அற்புதமாக ஆடினீர்கள். உங்களுடன் இருந்தது மிக Fun ஆக இருந்தது என விஜய் தெரிவித்தார். அவர் ரொம்ப ஸ்வீட். பொதுவா ரொம்ப கம்மியா தான் பேசுவார். அப்படி இருந்தும் எங்களை அவர் பாராட்டி பேசினார்" என தெரிவித்தார்.

Images are subject to © copyright to their respective owners

அதே போல தற்போது நடிகர் விஜய்யிடம் ஏதாவது கேள்வி கேட்க வாய்ப்பு கிடைத்தால் என்ன கேட்பீர்கள் என்ற கேள்வியும் முன் வைக்கப்பட இதற்கு பதில் அளித்த அம்பிகா கோலி, "எப்படி உங்களை Manage செய்கிறீர்கள்?. எப்படி உங்களை நீங்கள் மெயின்டைன் செய்கிறீர்கள். எப்படி இப்படி எல்லாம் நடனமாடுகிறீர்கள்?. எங்கே இதற்கான எனர்ஜி கிடைக்கிறது என்றெல்லாம் கேட்பேன்" என தெரிவித்தார்.

ரஞ்சிதமே பாடல் ஷூட் முடிஞ்சதும் விஜய் SIR சொன்னது" 🥰 ... வைரல் டான்சர் அம்பிகா ஷேரிங்ஸ்!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ranjithame song dancer ambika kohli about actor vijay exclusive

People looking for online information on Ambika Kohli, Ranjithame, Rashmika Mandanna, Varisu, Vijay will find this news story useful.