"23 ஆண்டு MEDIA-ல கிடைத்தைவிட  அஜீத்துடன் நடித்த பிறகு பெரிய வரவேற்பு கிடைத்தது" - ரங்கராஜ் பாண்டே

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹீரோ சினிமாஸ். சி.மணிகண்டன் வழங்க கதிரவன் கதாநாயகனாக நடிக்கும் படம் மீண்டும். இப்படத்தை கதை திரைக்கதை வசனம் எழுதி  சரவணன் சுப்பையா இயக்கி உள்ளார். இவர் அஜீத்குமார் நடிப்பில் பரபரப்பாக பேசப்பட்ட வெற்றிப்படமான  சிட்டிசன் படத்தை இயக்கியவர். 

Advertising
>
Advertising

மீண்டும் படத்தின் டிரைலர் வெளியீடு  மற்றும் பாடல்கள் முன்னோட்டம் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட்டிமன்ற நடுவர் திண்டுக்கல் லியோனி,  பேச்சாளர் நாஞ்சில் சம்பத், பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே, திரைப்பட இயக்குனர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், பேரரசு முன்னிலை வகித்து படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டனர். ரங்கராஜ் பாண்டே பேசியதாவது:

திரையுலகம் எப்போதுமே மிகப்பெரிய ரீச்சை கொண்டதாக இருக்கிறது. 23 ஆண்டுகள் பத்திரிகை மீடியாவில் கிடைத்தைவிட  நேர்கொண்ட பார்வை படத்தில் அஜீத்துடன் நடித்த பிறகு பெரிய வரவேற்பு கிடைத்தது. சினிமா அவ்வளவு பெரிய வலிமை கொண்டது. ரஜினி அரசியலுக்கு வந்தால் தங்கள் கட்சி என்னவாகும் என்று பலர் கவலைப்பட்டதற்கு காரணம் திரையுலகம் அவரை பிரபலப்படுத்தி வைத்திருந்தது. அப்படிப்பட்ட வீரியம் திரையுலகுக்கு இருக்கிறது. அதனாலேயே சமூக கருத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. இன்றைக்கு சினிமா எடுப்பது சவாலாகிவிட்டது. சினிமாக்காரர்கள் எல்லாம் சமூக விஷயத்திலும் தலையிட ஆரபித்து விட்டார்கள்..

சினிமாவைப் பற்றி அரசியல்வாதிகள் நிறைய விமர்சனம் செய்துக்கொண்டிருந்தார்கள். இப்போது அரசியலுக்கு உள்ளே இவர்கள் நேரடியாக வருவதால் ஒரு கேரக்டருக்கு பெயர் வைப்பதற்கு கூட நிறைய யோசிக்க வேண்டி உள்ளது. மீண்டும் பட டிரைலர் பார்த்தபோது இது த்ரில்லர் படமா, சமூக பிரச்னையை பேசும் படமா என்று யோசித்தேன். சவாலான விஷயத்தை இதில் சரவணன் சுப்பையா கையாண்டிருக்கிறார். இது சரவண சுப்பையாவுக்கு ஒரு கம்பேக் ஆக, மிகப்பெரிய உயரத்துக்கு இட்டுச்செல்லும் மைல்கல்லாக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

மீண்டும் படத்தில் கதிரவன் ஜோடியாக அனகா நடித்திருக்கிறார். இவர் டிக்கிலோனா, நட்பே துணை படங்களில் நடித்தவர்.  பிரணவ் ராயன், அனுராதா, துரை சுதாகர், சுபா பாண்டியன்,  அபிதா செட்டி,  யார் கண்ணன், எஸ்.எஸ்.ஸ்டான்லி, சுப்ரமணியம் சிவா, தர்ஷினி, இந்துமதி, மணிகண்டன், கேபிள் சங்கர், ஆதர்ஷ், மோனிஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர், கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதி உள்ளார். நரேன் பாலகுமாரன் இசை அமைத்திருக்கிறார். சீனிவாசன் தேவாம்சம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராஜா முகமது எடிட்டிங் செய்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சி அளித்திருக்கிறார். மணிமொழியன் ராமதுரை அரங்கம் அமைத்திருக்கிறார்.  நடனத்தை ஐ ராதிகா அமைத்துள்ளார். பி.ஆர். ஒ டைமண்ட் பாபு. விஜய் நடித்த புலி படத்தை தயாரித்த பி.டி.செல்வகுமார் மீண்டும் படத்தை வர்த்தகம் செய்துள்ளார்..  தமிழகமெங்கும், காமதேனு பிலிம்ஸ் சார்பாக பாலாஜி விநியோகிக்கிறார். 

இரண்டு தந்தை, ஒரு பெண் ஒரு குழந்தை என்ற மாறுபட்ட கதையம்சமுள்ள இப்படத்தில் கடற்படையினரிடம் சிக்கி தமிழ் மீனவர்கள்படும் சித்ரவதையை தத்ரூபமாக்கி படமாக்கி உள்ளனர். இந்தியா மீது மறைமுக தாக்குதல் நடத்தும் இலங்கை, சீனா பாகிஸ்தான் போன்ற நாடுகளின் விஞ்ஞான ரீதியான் தாக்குதலையும் இப்படத்தில் சொல்லியிருக்கின்றனர். 

பட கதாநாயகன் கதிரவன் இப்படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளில் உயிரை பணயம் வைத்து  நடித்துள்ளார். இதற்காக ஆறு நாட்கள் நிர்வாணமாக சித்ரவதை செய்யப்படும் காட்சிகளில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Rangaraj Pandey about Nerkonda paarvai movie and Ajith kumar

People looking for online information on Ajith Kumar, Citizen, Nerkonda Paarvai, Rangaraj Pandey will find this news story useful.