BRAHMāSTRA: ஆரம்பிக்கலாமா.. தமிழ்நாட்டு தலைவாழை இலை விருந்தில் நாகார்ஜூனா, ராஜமௌலி, ரன்பீர் கபூர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் அடுத்த மாதம் வெளியாகவுள்ள திரைப்படம் பிரம்மாஸ்திரா.  அயன் முகர்ஜி இந்தப் படத்தை இயக்க பிரபல தயாரிப்பாளர்  கரன் ஜோகர் தயாரித்துள்ளார். பிரமாண்ட படைப்பாக பெரும் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக உருவாகியுள்ள இப்படத்தின் இந்த முதல் பாகத்தை Fox Star Studios, Dharma Productions, Prime Focus மற்றும் Starlight Pictures இணைந்து இப்படத்தை வெளியிடுகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ‘வெள்ளை பூக்கள் உலகம் எங்கும் மலர்கவே...’ - பாடிய அனிருத் .. பார்த்து ரசித்த ரஹ்மான்.! வீடியோ

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் அமிதாப் பச்சனும் நடித்திருக்கிறார்.  தவிர, இப்படத்தில் நடிகர் ஷாருக் கான் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.    படத்தின் ப்ரமோஷன் இன்று சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூனா, இயக்குனர் ராஜமெளலிஆகியோர் கலந்துகொண்டனர். இப்படம் தென்னிந்திய மொழிகளில்  செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தின் விழாவை ஓட்டி சென்னையில் சங்கமித்த நடிகர்கள் ரன்பீர் கபூர், நாகார்ஜூனா மற்றும் இப்படத்தை தென்னிந்தியாவில் ரிலீஸ் செய்யும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, மூவரும் தமிழ்நாட்டு பாரம்பரிய வாழை சாப்பாட்டை சாப்பிடும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இந்திய உணவுகளில் தனித்துவமான தமிழ்நாட்டு சாப்பாடு, சாம்பார், கூட்டு பொரியல், அப்பளம் சகிதம் ஒன்றாக அமர்ந்து உணவுண்ட இந்த ஃபோட்டோ வைரலாகி வருகிறது.

இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் இருந்து, நவீன உலகிற்கு தகுந்தாற்போல் உருவாகியுள்ள கற்பனை கதைதான் இந்த திரைப்படம். கரன் ஜோகர், அமிதாப்பச்சன், ரன்பீர் கபூர், நாகார்ஜுனா, ஆலியா பட் போன்றவர்களின் பங்களிப்பினால் இப்படம் 8 வருட கடின உழைப்புக்கு பின் உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் அஸ்திரங்களை பற்றி கமர்சியலாக பேசுகிறது.

Also Read | 90S Kids குழந்தையா பார்த்த 'சந்திரமுகி' பொம்மியின் குழந்தை..!! வைரலாகும் க்யூட் ஃபோட்டோ..

தொடர்புடைய இணைப்புகள்

Ranbir Kapoor Nagarjuna SS Rajamouli in Chennai for Brahmastra Part 1

People looking for online information on Brahmāstra Part One – Shiva Chennai, Nagarjuna SS Rajamouli, Ranbir Kapoor will find this news story useful.