பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன
பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவர். குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரகுமானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது. கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்தார்.
ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.
அதே போல் ரன்பீர் கபூர், நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மகன் மற்றும் மூத்த நடிகர் - இயக்குனர் ராஜ் கபூரின் பேரன் ஆவார். ரன்பீர் கபூர் ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் மற்றும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்படத் தயாரிப்பையும் நடிப்பையும் முறையாக கற்றவர்.
பின்னர் அவர் பிளாக் (2005) திரைப்படத்தில் சஞ்சய் லீலா பன்சாலிக்கு உதவி இயக்குனரானார் மேலும் பன்சாலியின் காதல் திரைப்படமான (தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்) சாவரியா (2007) மூலம் நடிகராக அறிமுகமானார். கபூர் 2009 ஆம் ஆண்டில் வேக் அப் சித், அஜப் பிரேம் கி கசாப் கஹானி மற்றும் ராக்கெட் சிங்: ராஜநீதி (2010) , ராக்ஸ்டார் (2011) ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். இதில் ராக்ஸ்டார் ரன்பீர் கபூரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. A. R ரகுமான் இசையில் ரூமியின் சூஃபி ததுவங்களின் அடிப்படையில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் ஆனது
பர்ஃபி! (2012), படத்தில் காது கேளாத மற்றும் ஊமை மனிதராக நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். பின் யே ஜவானி ஹை தீவானி (2013) இல் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக ரன்பீரை கொண்டு சென்றது. பிரிதமின் இசையும், நம்ம கோயமுத்தூர் காரரான வேலாயுதம் மணிகண்டனின் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
ஏ தில் ஹை முஷ்கில் (2016), 2018 ஆம் ஆண்டில், ராஜ்குமார் ஹிரானியின் திரைப்படமான சஞ்சுவில் சஞ்சய் தத்தாக நடித்து, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக இந்த படத்தை ரன்பீர் மாற்றினார். ரன்பீர் அடுத்து வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் ஷம்ஷேரா படத்தில் நடிக்கிறார். லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்பீர் - ஆலியாபட் ஜோடி திருமணம் செய்ய உள்ளனர். மும்பை செம்பூரில் உள்ள ரன்பீர் வீட்டில் திருமண இடம் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ராஜஸ்தாவின் உதய்பூரில் திருமணம் செய்துகொள்வார்கள் என்று தகவல்கள் தெரிவித்தன.
இப்போது ஏப்ரல் மத்தியில் இரண்டாவது வாரத்தில் ஏப்ரல் மாதம் 13 முதல் 20 தேதிக்குள் மும்பையில் ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருவரின் திருமணம் தனிப்பட்ட முறையில் நடைபெறலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.