பாலிவுட் சூப்பர்ஸ்டார் ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமண புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
பாலிவுட்டின் மிகப்பெரிய நடிகை ஆலியா பட். இவர் பாலிவுட்டின் முக்கியமான இயக்குநரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவர்.
குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான ஸ்டுடென்ட் ஆஃப் தி இயர் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டின் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இம்தியாஸ் அலியின் ஹைவே படம், ஏ. ஆர். ரகுமானின் இசையில் பெரிய வரவேற்பை பெற்றது. ஆலியாவை நடிகையாக மட்டுமல்லாமல் சிறந்த பாடகியாகவும் உலகம் அறிய செய்தது. கடைசியாக RRR படத்தில் சீதாவாக நடித்தார்.
ஆலியா பட் தற்போது ரன்பீர் கபூர், அமிதாப் பச்சன் ஆகியோருடன் பிரம்மாஸ்திரா முதல் பாகம், ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார். அதே போல் ரன்பீர் கபூர், நடிகர்கள் ரிஷி கபூர் மற்றும் நீது சிங் ஆகியோரின் மகன் மற்றும் மூத்த நடிகர் - இயக்குனர் ராஜ் கபூரின் பேரன் ஆவார். ரன்பீர் கபூர் ஸ்கூல் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ் மற்றும் லீ ஸ்ட்ராஸ்பெர்க் தியேட்டர் மற்றும் ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் திரைப்படத் தயாரிப்பையும் நடிப்பையும் முறையாக கற்றவர்.
பின்னர் அவர் பிளாக் (2005) திரைப்படத்தில் சஞ்சய் லீலா பன்சாலிக்கு உதவி இயக்குனரானார் மேலும் பன்சாலியின் காதல் திரைப்படமான (தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள்) சாவரியா (2007) மூலம் நடிகராக அறிமுகமானார்.
கபூர் 2009 ஆம் ஆண்டில் வேக் அப் சித், அஜப் பிரேம் கி கசாப் கஹானி மற்றும் ராக்கெட் சிங்: ராஜநீதி (2010) , ராக்ஸ்டார் (2011) ஆகிய படங்கள் மூலம் பிரபலமானார். இதில் ராக்ஸ்டார் ரன்பீர் கபூரை சூப்பர் ஸ்டார் அந்தஸ்துக்கு உயர்த்தியது. A. R ரகுமான் இசையில் ரூமியின் சூஃபி ததுவங்களின் அடிப்படையில் உருவான இந்த படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் ஆனது.
பர்ஃபி! (2012), படத்தில் காது கேளாத மற்றும் ஊமை மனிதராக நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். பின் யே ஜவானி ஹை தீவானி (2013) இல் தீபிகா படுகோனுக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் பாக்ஸ் ஆபிசில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன் பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக ரன்பீரை கொண்டு சென்றது. பிரிதமின் இசையும், நம்ம கோயமுத்தூர் காரரான வேலாயுதம் மணிகண்டனின் ஒளிப்பதிவும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.
ஏ தில் ஹை முஷ்கில் (2016), 2018 ஆம் ஆண்டில், ராஜ்குமார் ஹிரானியின் திரைப்படமான சஞ்சுவில் சஞ்சய் தத்தாக நடித்து, எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாக இந்த படத்தை ரன்பீர் மாற்றினார். ரன்பீர் அடுத்து வாணி கபூர் மற்றும் சஞ்சய் தத்துடன் ஷம்ஷேரா படத்தில் நடிக்கிறார். லவ் ரஞ்சனுடன் ஷ்ரத்தா கபூர் ஜோடியாக பெயரிடப்படாத ஒரு படம், அனிமல் மற்றும் பிரம்மாஸ்திரா படங்கள் வெவ்வேறு நிலையில் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்பீர் - ஆலியாபட் ஜோடி இன்று திருமணம் செய்துள்ளனர். மும்பை செம்பூரில் உள்ள ரன்பீர் வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. நெருங்கிய சினிமாத்துறை நண்பர்க்ள் மற்றும் உறவினர்களுக்கு மட்டுமே அழைக்கப்பட்டனர்.
திருமணம் குறித்து ஆலியா - ரன்பீர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில், இன்று, எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களால் சூழப்பட்ட, வீட்டில் ... எங்களுக்கு பிடித்த இடத்தில் - எங்கள் உறவின் கடந்த 5 ஆண்டுகளாக நாங்கள் செலவழித்த பால்கனியில் - நாங்கள் திருமணம் செய்துகொண்டோம்.
ஏற்கனவே பல விஷயங்கள் நமக்குப் பின்னால் இருப்பதால், மேலும் பல நினைவுகளை உருவாக்க வேண்டியிருப்பதால் காத்திருக்க முடியாது ... காதல், சிரிப்பு, வசதியான மௌனங்கள், திரைப்பட இரவுகள், வேடிக்கையான சண்டைகள், மது மகிழ்வுகள் மற்றும் சீனக் கடிகளால் நிறைந்த நினைவுகள். எங்கள் வாழ்க்கையில் இந்த மிக முக்கியமான நேரத்தில் அனைத்து அன்புக்கும் ஆசிர்வாதத்துக்கும் நன்றி. இது இந்த தருணத்தை மேலும் சிறப்பானதாக்கியுள்ளது.
அன்புடன்,ரன்பீர் மற்றும் ஆலியா" என குறிப்பிட்டுள்ளனர்.