ராணாவின் திருமண நிகழ்வு குறித்து, மணப்பெண்ணின் அம்மா உருக்கம் - வைரலாகும் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ராணாவிற்கும் மிஹிகா பஜாஜ் என்பவருக்கும் நாளை (08/08/2020 ) எளிமையாக நடைபெறவிருக்கிதாம். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொள்ளவிருக்கின்றனராம்.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக ராணாவின் வீட்டில் திருமண நிகழ்வுகள் கலைகட்டி வருகின்றன. திருமண சடங்குகளின் போது மாப்பிள்ளையும் பெண்ணும் மிகவும் அழகிய உடைகளில் தோன்றும் காட்சி புகைப்படங்களாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மணப்பெண் மிஹீகா பஜாஜின் அம்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய திருமண உடையை என் மகள் அணிந்திருக்கிறாள். என் மகள் வளர்ந்து விட்டதை பார்த்து என்னால் அழுகையை நிறுத்த முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் பல்வேறு திருமண நிகழ்வுகளின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Rana Daggubati's mother-in-law shares an emotional post ahead of the wedding | திருமண நடைபெறவுள்ள நிலையில் ராணாவின் அத்தை எமோஷனல் போஸ்ட்

People looking for online information on Miheeka Bajaj, Rana Daggubati will find this news story useful.