கடைசியாக சிறுத்தை சிவா இயக்கத்தில், 'அண்ணாத்த' திரைப்படம், கடந்த ஆண்டு தீபாவளி ஸ்பெஷலாக நவம்பர் மாதம் நான்காம் தேதி, திரை அரங்கில் வெளியாகி இருந்தது.
Also Read | நடிகர் விஷாலுக்கு.. மீண்டும் காயம்!!படப்பிடிப்பு தளத்தில் நடந்தது என்ன.?
இதனைத் தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், புதிய திரைப்படம் ஒன்றில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியானது. முன்னதாக, கோலமாவு கோகிலா, டாக்டர், விஜய் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'பீஸ்ட்' உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய நெல்சனுக்கு, நான்காவது திரைப்படத்தில் சூப்பர்ஸ்டாரை இயக்கும் வாய்ப்பும் கிடைத்தது.
மேலும், சமீபத்தில் இந்த படத்திற்கு ஜெயிலர் என்ற டைட்டில் உறுதியாகி, அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி இருந்தது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு, பிரபல இசை அமைப்பாளர் அனிருத் இசை அமைக்கிறார். தொடர்ந்து, இந்த படத்தில் உள்ள நடிகர், நடிகைகள் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளிவராமல் இருந்து வந்தது. அதே போல, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் தெரிவித்திருந்தது.
அப்படி ஒரு சூழ்நிலையில், தற்போது ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் அப்டேட் மற்றும் படத்தில் இணைந்துள்ள நடிகை குறித்து அதிரடி தகவல் ஒன்று, நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்துள்ளது. அதன்படி, ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் ஆரம்பமாகி உள்ளதாகவும், மேலும் பிரபல நடிகை ரம்யாகிருஷ்ணன் ஜெயிலர் திரைப்படத்தில், ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இருந்த 'படையப்பா' திரைப்படத்தில் நீலாம்பரி என்னும் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து, ரசிகர்கள் பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தார் ரம்யாகிருஷ்ணன். இன்றும், நீலாம்பரி என்ற பெயரைக் கேட்டாலே, படையப்பா படத்தில் வரும் ரம்யாகிருஷ்ணனை தான் பலருக்கும் நினைவு வரும்.
அப்படி இருக்கையில், தற்போது ரஜினிகாந்தின் நடிப்பில், அடுத்ததாக உருவாக உள்ள 'ஜெயிலர்' படத்தில் ரம்யாகிருஷ்ணன் இணைந்ததாக வெளியாகி உள்ள தகவல், ரசிகர்கள் பலரையும் உற்சாகம் அடைய வைத்துள்ளது.
Also Read | Twitter-ல புது DP மாத்துன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.. இதான் காரணமா?