கௌதம் மேனன் இயக்கும் SUPER HIT வெப்-சீரிஸின் 2-வது சீசன்.. BTS போட்டோவுடன் வெளியான மாஸ் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கௌதம் மேனன் இயக்கும் புதிய வெப்-சீரிஸின் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | செம வைரலாகும் நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் ஸ்டேட்ஸ்.. பகிர்ந்த சுரேஷ் சந்திரா! முழு தகவல்

கடந்த 2019 ஆம் ஆண்டு, கௌதம் மேனன், 'கிடாரி' பிரசாத் முருகேசன் இணைந்து இயக்கிய ‘குயீன்’  வெப் சீரிஸ் MX ப்ளேயர் பிளாட்ஃபார்மில் வெளியானது. மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவான இந்த வெப் சீரிஸில் ஜெயலலிதா கேரக்டரில் நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார்.

ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்த ரம்யாகிருஷ்ணன் நடை,உடை,பாவனை பேச்சு என அனைத்திலும், தனக்கே உரிய ஸ்டைலிலும், ஜெயலலிதாவின் பிம்பத்தையும் கண்முன் நிறுத்தி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருந்தார்.

ரம்யா கிருஷ்ணர் ஜெயலிதாவாக நடிக்க, எம்ஜிஆராக மலையாள நடிகர் இந்திரஞ்சித் சுகுமாரன் நடிக்கிறார். ஜெயலலிதாவை வெவ்வேறு வயதில் அனிகாவும் அஞ்சனா ஜெயபிரகாஷும் நடித்தனர். இவர்களுடன் சோனியா அகர்வால், வனிதா கிருஷ்ணசந்திரன், விஜி சந்திரசேகரன் ஆகியோரும் நடித்தனர்.

இந்நிலையில் இந்த வெப் சீரிஸின் இரண்டாவது சீசனுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படமும் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தில் ஜெயலலிதா தோற்றத்தில் ரம்யா கிருஷ்ணன் காட்சியளிக்கிறார்.  இந்த இரண்டாவது சீசனையும் பிரசாந்த் முருகேசனுடன் இணைந்து கௌதம் மேனன் இயக்குகிறார்.

தற்போது விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களுக்கு பின் கௌதம் மேனன், சிம்பு, ஏ.ஆர். ரகுமான் ஆகிய மூவர் கூட்டணி மீண்டும் மூன்றாம் முறையாக வெந்து தணிந்தது காடு படத்திற்காக இணைந்தது.  வெந்து தணிந்தது காடு படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விட்டதாக படக்குழு சார்பில் இயக்குனர் கௌதம் மேனன் அறிவித்துள்ளார்.  விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ளது.

Also Read | தங்க நிற உடையில் ஜொலித்த நடிகை வேதிகா.. இணையத்தை கலக்கும் புதிய வைரல் போட்டோஷூட்

தொடர்புடைய இணைப்புகள்

RamyaKrishnan Gautham Vasudev menon web series Queen season two

People looking for online information on Gautham Vasudev Menon, Ramyakrishnan, Web Series, Web series Queen season 2 will find this news story useful.