பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரம் போட்டியாளர்களிடம் பிக்பாஸ் தனிமையில் பேசுகிறார். அவர்கள் குடும்பம், வாழ்க்கை போன்றவற்றை நினைவுபடுத்தி அவர்கள் உறுதியை டெஸ்ட் செய்கிறார். எமோஷனலாக போட்டியாளர்களை உறுதிப்படுத்தும் ஒரு மனோதத்துவ முயற்சி இது என்று பலரும் கருதுகின்றனர்.
தற்போது வெளியாகியிருக்கும் 2வது புரோமோவில் பிக்பாஸ் ரம்யாவிடம் பேசுகிறார். அப்பொழுது ரம்யாவிடம் பிக்பாஸ் வீட்டில் வாழ்க்கை, கோபமான தருணங்கள், வேதனையின் தருணங்கள் மற்றும் சக போட்டியாளர்கள் பற்றிய கேள்விகளை எழுப்புகிறார். ஆனால் இது எதற்கும் சலிக்காத வண்ணம் ரம்யா பிக்பாஸிடமே எதிர் கேள்வி கேட்கிறார். அவர் வெளியே வரும்போது அவரின் மன உறுதியை அனிதா புகழ்வதையும் பார்க்க முடிகிறது.
பிக்பாஸையே CONFUSE செய்த ரம்யா... நீங்க வேற லெவல்... பாராட்டும் ரசிகர்கள்..! வீடியோ
Tags : Ramya, Biggboss4tamil