பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்பவர் நடிகை ரம்யா பாண்டியன். பொதுவாக அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுகிறார். பாலாஜி கூறும்போது கூட "ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை.
ரம்யா பாண்டியனின் குடும்பத்திற்கும் சினிமா சினிமா துறைக்கு அப்பொழுதிலிருந்து தொடர்பு இருந்துள்ளது. மேலும் சமீபத்தில் நடந்த Freeze டாஸ்க்கின் போது கூட ரம்யா பாண்டியனின் தாயார் மற்றும் தம்பி பரசு பாண்டியன் இருவரும் தான் பங்கு கொண்டனர். ஆனால் பலருக்கும் ரம்யா பாண்டியனுக்கு ஒரு சகோதரி இருப்பது தெரியாது. அவரது பெயர் சுந்தரி திவ்யா பாண்டியன். பார்ப்பதற்கு இருவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி இருக்கின்றனர். இந்நிலையில் சுந்தரி திவ்யாவும் ஒரு நடிகை தான். நகுல் மற்றும் பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா இருவரும் நடித்த 'தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்' படத்தில் அவரின் தோழியாக அவர் தோன்றி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.