பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் மறுக்கமுடியாத போட்டியாளராக மாறியிருக்கிறார் ரம்யா பாண்டியன். அவரது நிதானமான பேச்சும், சமயோஜித புத்தியும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அவர் இறுதிவரை வருவார் என்று ரசிகர்களும் ஏன் போட்டியாளர்களுமே நினைக்கின்றனர். இந்நிலையில் ரம்யா பாண்டியனின் தம்பி தற்போது ஒரு பேட்டி அளித்துள்ளார். அப்படியே தனது அக்காவைப் பற்றி பல ஆச்சரியமான விஷயங்களை நம்முடன் பகிர்கிறார்.
அவர் கூறும் பொழுது "ரம்யா அக்கா நாங்கள் நினைத்தது போலவே, சிறப்பாக விளையாடி வருகிறார் அவருக்கு நாங்கள் அறிவுரை ஏதும் கூற வேண்டாம். நியாயமான விஷயங்களுக்கு தான் கோபப்படுவார் சொன்ன வாக்கை காப்பாற்றாமல் ஏமாற்றினால், அவருக்கு ரொம்ப கோபம் வரும். எனக்கு ஒரு சான்ஸ் கிடைத்தால், அக்கா மற்றும் சோம் அண்ணாவை காதலர்களாக வெளியே சித்தரிக்கின்றனர் என்று சொல்லி அவரிடம் உஷாராக இருக்க சொல்வேன். ரம்யா அக்கா இதேபோல் விளையாடினாலே எங்களுக்கு போதும். அவர் ஜெயிக்கிறது மக்கள் கைகளில் இருக்கிறது. ஆனால் இப்படி விளையாடி அவர் தோற்றாலும் பரவாயில்லை" என்று கூறியுள்ளார்.