பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடுமையான போட்டியாளராக திகழ்ந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். பொதுவாக அமைதியா இருந்தாலும், பேச வேண்டிய இடத்தில் தனது கருத்தை நறுக்கென சொல்லி விடுகிறார். பாலாஜி கூறும்போது கூட "ஆண்களுக்கு பெண்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை என்பதற்கு ரம்யா ஒரு சிறந்த உதாரணம் என்று கூறியிருந்தார். அப்படி தனது சாதுர்ய குணத்தினால் பல சூழ்நிலைகளை சுமுகமாக மாற்றுவது அவருக்கே உரிய தனித்திறமை.
பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். அதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு 16 கோடி வாக்குகளை பெற்று அவர் முன்னிலையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து ரம்யா பாண்டியன் நான்காம் இடத்தை பிடித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். இந்நிலையில் வீடு திரும்பிய ரம்யா பாண்டியனுக்கு அவரது குடும்பத்தினர் ஏகோபித்த வரவேற்பு அளித்துள்ளனர். மேளம் தட்டி, பட்டாசு வெடித்து, கேக் வெட்டி சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.