நடிகை ரம்யா பாண்டியன் குக் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். முன்னதாக குக்கூ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய ராஜுமுருகன் இயக்கத்தில் குரு சோமசுந்தரத்துடன் இணைந்து ஜோக்கர் எனும் திரைப்படத்தில் ரம்யா பாண்டியன் நடித்து இருந்தார்.
பின்னர் புடவையில் போட்டோஷூட் எடுத்ததற்காக பிரபலமாக அறியப்பட்ட ரம்யா பாண்டியன், அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மற்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழுடன் இணைந்து செய்த காம்போ அட்ராசிட்டி, அவரை பலரிடமும் கொண்டு போய் சேர்த்தது. தொடர்ந்து விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற ரம்யா பாண்டியன் தற்போது பல படங்களில் பிசியாக இருக்கிறார்.
இதனிடையே சமுத்திரகனியுடன் இணைந்து ஆண் தேவதை என்கிற படத்தில் நடித்தார் ரம்யா பாண்டியன். இந்த படத்தை இயக்கிருந்தார் தாமிரா. இந்நிலையில் இயக்குநர் தாமிரா சென்னையில் உடல் நல குறைவால் காலமானார். இதுபற்றி தமது இன்ஸ்டாவில் பதிவிட்ட ரம்யா பாண்டியன், “நான் எப்போதும் தமிரா சாரின் ஸ்கிரிப்ட் எழுதும் திறன்களுக்கு ரசிகை. தமிழ் மீதான அவரது அன்பும் ஆர்வமும் என் உட்பட பலருக்கு உத்வேகம் அளித்துள்ளது.
எல்லாவற்றிற்கும் மேலாக, அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் அவர் நடத்திய விதம் அவரை சிறப்புறச் செய்கிறது. ஆண் தேவதையின் முழு நடிகர்கள் மற்றும் குழுவினர் எப்போதும் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள். திறமையைப் பாராட்ட தவறாதவர். அதுவும் முழு மனதுடன். அவர் எனக்கு ஊக்கம் அளித்து, அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவரைப் போல என்னை கவனித்து வந்தார். இது தனிப்பட்ட இழப்பு. எல்லாவற்றிற்கும் நன்றி சார். அன்புள்ள தங்களை இழக்கிறேன். குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல்.” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.