அந்த பொண்ணு தான் 'பர்ஸ்ட்' கண்டு புடிச்சுச்சு... அப்போ 'நீங்க' கண்டுக்கவே இல்லையே ஏன்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் நேற்று நிகழ்ந்த பிரீ பாஸ் பஞ்சாயத்தில் சக போட்டியாளர்களுடன் சேர்ந்து சனம் ஷெட்டி, ரேகா, ஷிவானி, கேப்ரியலா மற்றும் சம்யுக்தா ஆகியோரை சுரேஷ் வெளியே அனுப்பி வைத்தார். அதிக வாக்குகள் பெற்று நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் அடிப்படையில் இதை வைத்து சுரேஷ் சாமர்த்தியமாக காய் நகர்த்தினார்.

Ramya Pandian suddenly turned against Suresh Chakravarthy

சனம் ஷெட்டி, சம்யுக்தா, ரேகா, ஷிவானி நாராயணன் என மற்றவர்கள் யாரும் இதை பெரிதாக கண்டுபிடிக்காமல், விட்டால் போதுமென அடித்து பிடித்து வெளியேறினர். தன்னுடைய முறை வந்தபோது கேப்ரியலா இதை சொல்ல ரம்யா பாண்டியன், ஆஜித் இருவரும் அவர் கூறுவதை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. தங்களுக்கு போட்டியாக அவர் வந்து விடுவார் என நினைத்தார்களா? என்பது தெரியவில்லை.

இது என்னடா நமக்கு வந்த சோதனை என புலம்பிக்கொண்டே சென்றாலும் நான் இதை நன்றாக என்ஜாய் செய்தேன் என சுரேஷ் கேமரா முன்னால் பிக்பாஸை புகழ்ந்து வீட்டின் உள்ளே சென்றார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஏம்மா ரம்யா, கேப்ரியலா சொன்னப்போ அம்புட்டு அமைதியா இருந்துட்டு இப்போ என்னமா இப்படி புட்டுப்புட்டு வைக்குற? என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Ramya Pandian suddenly turned against Suresh Chakravarthy

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.