2016ல் ராஜூ முருகன் இயக்கிய 'ஜோக்கர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ரம்யா பாண்டியன்.

Also Read | போடு வெடிய..கார்த்தி நடிக்கும் விருமன்.. ரிலீஸ் எப்போ? வெளிவந்த OFFICIAL தகவல்!
2018ல் ஆண் தேவதை படத்தில் இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மணிரத்னத்தின் உதவி இயக்குனரான ஷெல்லியுடன் மானே தேனே பொன்மானே என்ற குறும்படத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்றார். பின் பாலாஜி சக்திவேலின் ரா ரா ராஜசேகர் படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்தார், ஆனால் அந்த படம் முழுமை பெறவில்லை.
சமையல் காமெடி நிகழ்ச்சியான, குக் வித் கோமாளி மற்றும் விஜய் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சியான கலக்க போவது யாருக்கு நடுவராக இருந்தார். பிக் பாஸ் தமிழ் ரியாலிட்டி ஷோவின் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். அந்த போட்டியில் ஒரே பெண் இறுதிப் போட்டியாளராகவும், 2வது ரன்னர்-அப்பாகவும் இடம் பிடித்தார்.
அக்டோபர் 2020 இல் ZEE5 இல் வெளியான முகிலன் என்ற வலைத் தொடரில் ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடித்தார். சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் ராமன் ஆண்டாலும் ராவணம் ஆண்டாலும் படம் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. தற்போது மம்முட்டி உடன் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ரம்யா பாண்டியனும் ஒருவர். அவ்வப்போது போட்டோ ஷூட் புகைப்படங்களை அப்லோடு செய்வது, ரசிகர்களுடன் கலந்துரையாடல் செய்வதையும் வாடிக்கையாக கொண்டிருப்பவர். இந்நிலையில் புதிய போட்டோ ஷூட் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ரம்யா பாண்டியன், மெரூன் நிற நவநாகரீக உடையில் காட்சியளிக்கிறார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். http://behindwoods.com/bgm8