ரம்யா பாண்டியன் தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படம்.. அப்படியே அம்மா ஜாடை..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ரம்யா பாண்டியனுக்கு தற்போது அறிமுகமே தேவை இல்லை. ஒரே ஒரு போட்டோ ஷூட் மூலம் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர். ஆண் தேவதை, ஜோக்கர் போன்ற படங்களில் நடித்துள்ளார். அவர் கையில் மேலும் பெயரிடப்படாத இரண்டு படங்கள் இருக்கிறது. அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்கு பெற்று பிரபலமடைந்தார். கலக்கப்போவது யாரு சீசன் 9 நடுவராக பங்கேற்றார். தற்போது புகழ்பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கு கொண்டுள்ளார்.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சிறப்பாக விளையாடி வருகிறார். நேற்றைய டாஸ்க்கில் போட்டியாளர்களும் அவர் தான் வெற்றி பெறுவார் என்று கூறியது அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ரம்யா பாண்டியனின் குடும்பத்தை பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தந்தை சினிமா தயாரிப்பாளர். இவரது சித்தப்பாவான  அருண்பாண்டியன் புகழ்பெற்ற தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆவார். இந்நிலையில் அவர் தனது தாயாருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பார்ப்பதற்கு அச்சு அசல் ரம்யா பாண்டியன் போலவே இருக்கிறார் அவரது தாயார் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ramya pandian latest photo with mother goes viral ரம்யா பாண்டியன் குடும்ப புகைப்படம்

People looking for online information on Biggboss, Ramya Pandian will find this news story useful.