தம்பியா? 'அபூர்வ சகோதரர்கள்' கமல் போல கலங்கிப்போன சோம்... அப்போ அந்த சாக்லேட்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் போட்டியாளர்களில் அமைதியாக இருந்த சோம் தற்போது மெதுவாக ஸ்கோர் செய்து வருகிறார். அவருக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளம் உருவாகி வருகிறது. அதே நேரம் இந்த வாரம் அவரை வெளியேற்றி விடுவார்கள் என்றும்  தகவல்கள் அடிபட்டு வருகின்றன.

ஜோசியர் அவதாரம் எடுத்த சுரேஷ் சக்கரவர்த்தி கூட இதை மறைமுகமாக உறுதி செய்திருக்கிறார். அவரின் ஜோசியம் பலிக்குமா? என்பதை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். சரி தம்பி விஷயத்தை பார்ப்போம். நேற்று டாஸ்க்கில் அர்ச்சனா சுண்டல் விற்றார். அதேபோல ஆரி, ரமேஷ், சோம் ஆகியோரையும் விற்க வைத்தார்.

அப்போது சோம், ரம்யாவிடம் சென்று கடல தான் போட முடியல. சுண்டலாவது போடு என்பது போல சொன்னார். பதிலுக்கு ரம்யா தம்பி என காலை வாரிவிட்டு விட்டார். அதுவும் இரண்டு முறை அவர் தம்பி என சொன்னதும் சோம் அப்படியே அபூர்வ சகோதரர்கள் கமல் போல கலங்கிப்போய் விட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் அப்போ அந்த சாக்லேட்? என கிண்டலடித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ramya pandian called Som as Brother, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.