பிக்பாஸ் வீட்டில் டிக்கெட் டூ பினாலேவிற்கான டாஸ்க் தற்போது இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சோமசேகருக்கு பைனல் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது டாஸ்க் ஒன்றில் ஷிவானி, ரம்யா இருவரும் ஒருவருக்கு ஒருவர் பயங்கர டப் கொடுத்து வருகின்றனர். இன்று இந்த டாஸ்க்கின் இறுதிப்பகுதி ஒளிபரப்பாகும்.

இந்த நிலையில் போட்டியாளர்களின் குணங்களுக்கு ஏற்ப அவர்களுக்கு சொற்றொடர்கள் வழங்கும் டாஸ்க்கில் பாலாஜி, ஆரி இருவருக்கும் அதிக ரெட் கார்டுகள் கிடைத்தன. இதனால் பிக்பாஸ் அவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் வழங்கினார். இதைப்பார்த்த ரசிகர்கள் ரெட் கார்டு எது வந்தாலும் ரம்யா, ஷிவானி இருவரும் அதை ஆரிக்கே வழங்கியதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ரம்யா, ஆரி இருவரும் ஒருவரை ஒருவர் வாரி விடத்தவறுவது இல்லை. தற்போது இந்த லிஸ்டில் ஷிவானியும் இணைந்து இருக்கிறார் போல.