Ramraj Cotton: கேஜிஎஃப் மற்றும் வரவிருக்கும் கெஜிஎஃப்-2 திரைப்படங்களி நாயகன் ராக்கிங் ஸ்டார் யாஷ், ராம்ராஜ் காட்டனின் புதிய இந்திய பிராண்ட் அம்பாசிடராக இனி செயல்பட இருக்கிறார்.
ஆம், இது தொடர்பாக ராம்ராஜ் காட்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ராக்கிங் ஸ்டார் யாஷ் உடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறது ராம்ராஜ் காட்டன். பல்திறனும் தனித்துவமும் கொண்ட தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டுள்ள திறமையான நட்சத்திரம் யாஷ். அவர் ஒரு சூப்பர் ஸ்டார் மட்டுமல்ல. உதவும் உள்ளம் படைத்தவர். அதோடு உத்வேகத்தின் சின்னமாகவும் திகழ்பவர்.
Also Read: "உதயநிதியிடம் ஒரு ரகசியம் இருக்கு".. 1st time உதய் பற்றி இவ்ளோ பேசிருக்காரு EPS!
ராம்ராஜ் காட்டன்..
வேட்டிகள், சட்டைகள், உள்ளாடைகள், பின்னல் ஆடைகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆடைகள் ஆகியவற்றின் உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ராம்ராஜ் காட்டன். இது ஓர் உள்நாட்டு ‘சுதேசி பிராண்ட்’ என்பது குறிப்பிடத்தக்கது. ராம்ராஜ் காட்டன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம், புதுமைகள் மற்றும் தயாரிப்பு நுட்பங்களுடன் சேர்த்து நாள்தோறும் மேம்படுத்தி வருகிறது. மிகப்பிரமாண்டமான கனவுகளை நனவாக்கும் திறன் படைத்த தொலைநோக்கு பார்வையாளரான திரு.கே.ஆர்.நாகராஜனின் முன்னெடுப்பில் அடித்தளத்திலிருந்து படிப்படியாக வளர்ந்து ஒரு பேரரசாக உருவெடுத்துள்ள நிறுவனம்தான் ராம்ராஜ் காட்டன். ஒரு புதுமையான மற்றும் மார்க்கெட் லீடர் என்கிற முறையில் ராம்ராஜ் காட்டன், வேட்டியின் மீதான பார்வையை மாற்றி அதை வியக்கவைக்கும் உயரத்துக்கு உயர்த்தியுள்ளது.
கனவை கைவிடாத ரோல் மாடல் யாஷ்..
நெசவாளர்களின் முன்னேற்றமும் நலவாழ்வும் தான் ராம்ராஜ் காட்டனின் அடித்தளம். இன்று 50,000+ பிளஸ் நெசவாளர் குடும்பங்கள் ராம்ராஜ் பிராண்டன் தொடர்புடையவை. அதுமட்டுமல்ல தென்னிந்தியா முழுவதும் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் ராம்ராஜ் காட்டன் உருவாக்கியுள்ளது. ராம்ராஜ் குடும்பத்தில் லேட்டஸ்ட்டாக இணைந்திருக்கிறார் ராக்கிங் ஸ்டார் யாஷ். இன்று ஒரு ஐகானாகாவும் பலருக்கு உத்வேகமாகவும் இருக்கிற சூப்பர் ஸ்டார் யாஷ். ராம்ராஜ் காட்டனின் வெற்றிக் கதைக்கு இணையானது தான் திரையுலகில் யாஷ் வளர்ந்த கதையும். எந்த சூழ்நிலையிலும் ஒருபோதும் தன் கனவை கைவிடாத மிகச்சரியான ரோல் மாடல் யாஷ்.
17 ஆண்டுகால நடிப்பு வாழ்க்கையில் அவர் நாடகம், தொலைக்காட்சி, திரைப்படங்களில் துணை கதாபாத்திரம் என பலவிதங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருக்கிறார். கேஜிஎஃப் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இந்திய சினிமாவில் மிகவும் நம்பகமான சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக உயர்ந்து இருக்கிறார். அவரது ஆளுமையும் வசீகரமும் கோடிக்கணக்கான இதயங்களைக் கவர்ந்த பிறகும் கூட, அவர் தனது வேர்களை ஒருபோதும் மறந்து விடவில்லை.
யாஷ் ஒரு சிறந்த மனிதர்
ஒரு வெற்றிகரமான நடிகர் என்பதை தாண்டி, யாஷ் ஒரு சிறந்த மனிதர். யஷோமார்கா எனும் அறக்கட்டளை வாயிலாக, சமூகத்துக்கான தன் பங்களிப்பை திரும்பச் செலுத்துகிறார். யாஷ் மற்றும் அவரது மனைவி ராதிகா பண்டிட்டால் தொடங்கப்பட்டுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனம் இது. கர்நாடக மாநிலத்தில் உள்ள கிராமங்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
ராக்கிங் ஸ்டார் யாஷ் தனது பிராண்ட் அம்பாசிடராக இருப்பதில் ராம்ராஜ் காட்டன் பெருமை கொள்கிறது. யாஷ் போன்ற எழுச்சியூட்டும் ஆளுமை பிராண்டின் சரியான முகமாக விளங்குவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தனது கனவை கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் விருப்பத்துடன் வெற்றிகரமாக நிறை வேற்றினார். அதேநேரத்தில் சமூகத்துக்கும் பெரிய அளவில் திருப்பித் தருகிறார்.
நீண்ட பயணமாக மலரும்..
அதனால் ராம்ராஜ் காட்டன் நிறுவனமும் தன்னைப் போன்ற சிந்தனை உடைய ஒரு சூப்பர் ஸ்டாருடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறது. சமூக முன்னேற்றத்தை அளிக்கும் அவரது நோக்கங்களுடன் நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தையும் முன்னேற்றத்தையும் மேம்படுத்துவதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த ஒத்துழைப்பு ஒரு நீண்ட பயணமாக மலரும். இந்த ஒருங்கிணைப்பின் வாயிலாக இந்திய ஃபேஷன் துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுத முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். ராம்ராஜ் வேட்டியை நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் எடுத்துச் செல்வதன் மூலம் இந்திய பாரம்பரியம் தொடர்வதை என்றும் உறுதி செய்வோம்.
Also Read: "ஆரம்பிச்சாச்சு.. ஆபரேஷன் க்ளீனிங்".. அத்தன பேரும் நாமினேட் பண்ணிய அந்த 2 பேர்!