எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்து வரும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘ஆர்.ஆர்.ஆர்’.

இந்த படத்தின் FirstLook வெளியானதுமே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது தற்போது இப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஒருபுறம் இப்படத்தின் தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் மற்றும் பிஸின்சஸ் குறித்த பணிகள் நடந்துவருகின்றன. இப்படத்தின் தமிழ் ரிலீஸ் உரிமத்தை பிரபல தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான லைகா ஏற்கனவே வாங்கியிருந்தது.
இந்த சூழலில் தான், ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் நடித்துள்ள ராம் சரணின் கதாபாத்திரம் குறித்த வேற லெவல் போஸ்டர் வெளியாகி இருக்கிறது இந்த போஸ்டரில் அல்லுரி சீதாராமராஜூ என்கிற கேரக்டரில் தான் ராம்சரண் தேஜா நடிக்கிறார் என எஸ்.எஸ்.ராஜமெளலி ஒரு போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளார்.
அல்லுரி சீதாராமராஜூ ஆங்கில ஏகாதிபத்திய அரசுக்கு எதிராக போர் நடத்திய ஆந்திர புரட்சி வீரர் ஆவார். இவர் ஆங்கிலேய அரசுக்கு எதிராக செய்த ராம்பா கலகம் மிகவும் பிரபலம். இவருடைய கேரக்டரில் தான் ராம் சரண் தேஜா தற்போது நடிக்கிறார். இந்த ஆர்.ஆர்.ஆர் படம் வரும் அக்டோபர் 23ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகின்றன.
ALSO READ: காடன் திரை விமர்சனம் Kaadan Movie Review