நடிகையின் காலில் முத்தமிட்ட இயக்குனர் ராம்கோபால் வர்மா! வீடியோவால் சர்ச்சை RAM GOPAL VARMA KISSES ASHU REDDY

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ரங்கீலா, அமிதாப் பச்சனின் சர்கார் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் ராம் கோபால் வர்மா சமீப காலமாக பரபரப்பான படங்களை இயக்கி வருகிறார்.

Advertising
>
Advertising

Also Read | “எங்கேயும் எப்போதும்” எனக்கே என்ன பிடிச்ச படம்! “கற்றது தமிழ்” மேல மரியாதை இருக்கு.! அஞ்சலி

அவரது இயக்கத்தில் அடுத்த தன்பாலின ஈர்ப்பு குறித்த டேஞ்சரஸ் திரைப்படம் வெளியாக இருக்கிறது. பேச்சு, ட்வீட், செயல் என எல்லாவற்றிலும் ராம் கோபால் வர்மா குறித்த சர்ச்சைக்கு பஞ்சம் இருந்ததில்லை. அந்த வகையில் இயக்குனர் ராம் கோபால் வர்மா, தற்போது நடிகை ஒருவரின் காலை பிடித்து வருடுவதும் பேசுவதுமான  வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சில காரணங்களால் டேஞ்சர்ஸ் திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போன நிலையில்,   இப்படத்திற்காக இயக்குநர் ராம் கோபால் வர்மா பல வழிகளிலும் விளம்பரப்படுத்தி வருகிறார். இந்நிலையில்தான், நடிகை ஆஷூ ரெட்டியுடன், இயக்குநர் ராம் கோபால் வர்மா செய்துள்ள இந்த வினோதமான செயல்,  வீடியோவாக பரவி, இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அப்ஸரா ராணி மற்றும் நைனா கங்குலி நடிப்பில் உருவாகி உள்ள டேஞ்சரஸ் திரைப்படம் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்படும் என திட்டமிட்ட நிலையில், தெலுங்கு பிக்பாஸ் பிரபலமான ஆஷூ ரெட்டியின் கால்களை பிடித்து வருடக்கூடிய வீடியோவை ராம் கோபால் வர்மா வெளியிட, அந்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில், நடிகையின் பாதத்தை வருடி, முத்தமிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா, பின்பு அவரது கால் விரல்களை வாயில் வைத்து கடிப்பது போன்றும் செய்கிறார்.

சர்ச்சைக்குரியதாக ரசிகர்களால் குறிப்பிடப்பட்டு வரும் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Baakiyalakshmi : அப்படி போடு.! பாக்கியலட்சுமி சீரியலில் Bigg Boss அசீம் & ஷிவானி..! செம வைரல்..

நடிகையின் காலில் முத்தமிட்ட இயக்குனர் ராம்கோபால் வர்மா! வீடியோவால் சர்ச்சை RAM GOPAL VARMA KISSES ASHU REDDY வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ram Gopal Varma Kisses Ashu Reddy Feet Video Viral

People looking for online information on Ashu Reddy, Ram Gopal Varma, Trending, Viral will find this news story useful.