NAATU NAATU : 'நாட்டு நாட்டு' ஆஸ்கார் விருது .. RRR நடிகர் ராம் சரண் சொன்னது என்ன?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில், திரையுலகின் மிக உயிரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா தொடங்கியது. இதில்‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடல் விருது வென்றுள்ளது.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | LEO லோகேஷ்-க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சஞ்சய் தத் & மலையாள வில்லன் நடிகர்.. TRENDING

RRR திரைப்படம் பல மொழிகளில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் (25.03.2022) உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.

ராம்சரண், ஜூனியர் NTR கதாநாயகர்களாக நடிக்க, இவர்களுடன் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன், ஆலியாபட், சமுத்திரக்கனி ஆகியோர் முன்னனி கதாபாத்திரங்களில் நடித்தனர். இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழ்ந்த தெலுங்கு சுதந்திர போராட்ட வீரர்களான அல்லூரி சீதாராம ராஜீ மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை தழுவி கற்பனையாக இந்த படம் உருவாகியது. இந்த படத்தில் ராம் சரண், அல்லூரி சீதாராம ராஜுவாக நடித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த அல்லூரி சீதாராம ராஜு சுதந்திரத்திற்காக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடியவர் ஆவார். ஜூனியர் என்டிஆர், கொமரம் பீம் ஆக நடித்துள்ளார். கொமரம் பீம் ஹைதராபாத் நிஜாம்கள் மற்றும் வெள்ளையர்களை எதிர்த்து போராடிய பழங்குடி இனத்தை சேர்ந்தவர் ஆவார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் 95வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சிறந்த பாடலுக்கான விருதை ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் வென்றுள்ளது.  இப்படத்தின் இசையமைப்பாளர் & இந்த பாடலில் இசையமைப்பாளர் MM கீரவாணி மற்றும் நாட்டு நாட்டு ஒரிஜினல் தெலுங்கு வெர்ஷன் பாடலாசிரியர் சந்திரபோஸ் இருவரும் இந்த விருதை பெற்றுக் கொண்டனர்.  இதனை தொடர்ந்து, தான் நடித்த 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கார் விருது பெற்றதை பற்றி நடிகர் ‘குளோபல் ஸ்டார்’ ராம் சரண் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:  “இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி, 'நாட்டு நாட்டு' படத்தின் இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணி, பாடலாசிரியர் சந்திரபோஸ் உள்ளிட்ட 'ஆர்ஆர்ஆர்' குழுவில் உள்ள அனைவருக்கும் வாழ்த்துகள். பாடலை சிறப்பாக பாடிய ராகுல் சிபில்கஞ்ச் மற்றும் காலபைரவா, நடன இயக்குநர் பிரேம் ரக்ஷித் மற்றும் இந்த பாடலுக்கு உயிர்கொடுத்த அனைவருக்கும் பாராட்டுகள். 'நாட்டு நாட்டு' பாடல் ஒரு உலகளாவிய கொண்டாட்டமாக மாறியுள்ளது. சிறந்த கதை மற்றும் சிறந்த பாடல் மொழி மற்றும் எல்லைகளை கடந்து வெற்றி பெறும் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்துள்ளது.

Images are subject to © copyright to their respective owners.

இந்தப் பாடல் இனி எங்களின் பாடல் அல்ல, 'நாட்டு நாட்டு' இனி பொதுமக்களுக்கும் அதை ஏற்றுக்கொண்ட அனைத்து வயது மற்றும் கலாச்சாரங்களை சேர்ந்தவர்களுக்கும் சொந்தமானது. ‘தி எலிபெண்ட் விஸ்பரர்ஸுக்கு’ ஆஸ்கார் விருது பெற்ற கார்த்திகி கோன்சால்வ்ஸ் மற்றும் குனீத் மோங்கா ஆகியோரையும் வாழ்த்துகிறேன். இந்தியாவிற்கு இது ஒரு சிறந்த தருணம்!" என தெரிவித்துள்ளார்.

Also Read | MM கீரவாணிக்கு ஆஸ்கர் அறிவிச்ச உடனே.. ராஜமௌலி குடும்பத்தினர் கொடுத்த ரியாக்ஷன்.. வீடியோ..!

தொடர்புடைய இணைப்புகள்

Ram Charan Wishes Naatu Naatu for getting Oscars 2023

People looking for online information on Naatu Naatu, Oscars 2023, Ram Charan will find this news story useful.