RC15: 80 வினாடி சிங்கிள் டேக் நடனம்.. இயக்குனர் ஷங்கரை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ராம் சரண்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் RC15 படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

ஷங்கர் இயக்கத்தில் RC15 படத்தை  ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி நடித்து வருகிறார்.

ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி, எஸ். ஜே. சூர்யா ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் நடைபெற்றது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு ராஜமுந்திரி அருகே உள்ள தோசகாயலபள்ளி கிராமத்தில் நடந்தது. பின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் நடந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு கடந்த மே மாதம் விசாகப்பட்டினத்தில் நடந்தது.

இந்த படத்தின் பாடல் படப்பிடிப்பு நியுசிலாந்து நாட்டில் நடைபெற்றது.   மிகப்பெரிய பொருட்செலவில் சுமார் 15 கோடி ரூபாய் செலவில் இந்த படத்தின் ஒரு பாடல் காட்சி மட்டும் நியுசிலாந்து நாட்டில் படமாக்கப்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம் நகரில் நடந்தது. கூடிய விரைவில் படப்பிடிப்பை முடிக்க படக்குழு மும்முரமாக உள்ளது.

இந்த படப்பிடிப்பில் சில முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன, மேலும் ராம் சரண் மற்றும் பல நடிகர்கள் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில்  நடிகர் ராம் சரணை பார்க்க மக்கள் குவிந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே டேக்கில் 80 வினாடிகள் நடனம் ஆடி நடிகர் ராம் சரண் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்று கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் குறிப்பாக இயக்குனர் ஷங்கரை, ராம் சரண் தனது நடனத் திறமையால் கவர்ந்ததாக படத்தின் யூனிட்டுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Ram Charan impresses Shankar with his single take dance

People looking for online information on Kiara Advani, Ram Charan, RC15, Shankar will find this news story useful.